ரயில்வேயில் 1659 பேருக்கு வேலைவாய்ப்பு ரெடி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா

RRC North Central Railway Apprentice Recruitment 2022: வட மத்திய ரயில்வேயில் வேலை பார்க்க ஆர்வம் இருக்கிறதா? 1659 பேருக்கு வாய்ப்பு உண்டு. வேலைவாய்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 3, 2022, 01:18 PM IST
  • ரயில்வேயில் பணிபுரிய ஆர்வம் உண்டா
  • ரயில்வேயின் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள்
  • 1659 பேருக்கு வேலைவாய்ப்பு ரெடி விண்ணப்பிக்கலாம்
ரயில்வேயில் 1659 பேருக்கு வேலைவாய்ப்பு ரெடி: விண்ணப்பிக்க நீங்க ரெடியா title=

புதுடெல்லி: ரயில்வேத்துறையில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 1659 பேருக்கு வாய்ப்பு உண்டு. வேலைவாய்ப்பு பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (Railway Recruitment Cell ), ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வட மத்திய ரயில்வே (North Central Railway) பிரிவில் பல அப்ரண்டிஸ் பணிகளுக்கான இடங்கள் காலியாக இருக்கிறது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் RRC இன் இணையதளமான rrcpryj.org மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம் மொத்தம் 1659 பணியிடங்கள் நிரப்பப்படும்.

மேலும் படிக்க | அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது

இந்த பணிநியமனம் தொடர்பான விண்ணப்ப நடைமுறை நேற்று (2022, ஜூலை 02) தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் 2022, ஆகஸ்ட் முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

இந்த காலியிடங்களுக்கு தகுதி, ஊதிய அளவு மற்றும் விண்ணப்ப செயல்முறை பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளவும்...

முக்கியமான தேதிகள் 
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஜூலை 02, 2022
விண்ணப்பிக்க இறுதி நாள்: ஆகஸ்ட் 01, 2022

மேலும் படிக்க | இந்திய உச்ச நீதிமன்ற வேலைவாய்ப்புகள்: 210 பேருக்கு வாய்ப்பு

RRC வட மத்திய ரயில்வே (NCR) ஆட்சேர்ப்பு 2022 காலியிட விவரங்கள்
ஃபிட்டர்
வெல்டர் (G&E)
ஆர்மேச்சர் விண்டர்
மெஷினிஸ்ட்
தச்சர்
எலக்ட்ரீஷியன்
ஓவியர் (பொது)
மெக்கானிக் (DSL)
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்
கணினி பராமரிப்பு
வயர்மேன்
பிளம்பர்
மெக்கானிக் கம் ஆபரேட்டர் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் சிஸ்டம்
சுகாதார துப்புரவு ஆய்வாளர்
மல்டிமீடியா மற்றும் வலைப்பக்க வடிவமைப்பாளர்
எம்எம்டிஎம், கிரேன், டிராஃப்ட்ஸ்மேன் (சிவில்)
வரைவாளர் (சிவில்)
ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம்)
ஸ்டெனோகிராபர் (இந்தி)

மேலும் படிக்க | ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்பு

பணிக்கான தகுதி 

SSC/மெட்ரிகுலேஷன்/10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அதற்கு இணையான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திடம் இருந்து, NCVT/SCVT அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு நடைமுறை
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே பகிரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் கல்வித் தகுதி மற்றும் தேர்வு செயல்முறையை சரிபார்க்கலாம்:

RRC வட மத்திய ரயில்வே (NCR) ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2022 ஐ இங்கு பதிவிறக்கவும்

RRC வட மத்திய ரயில்வே (NCR) ஆட்சேர்ப்பு 2022 விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு 
விண்ணப்பக் கட்டணம், ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது ஆகஸ்ட் 01, 2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும் 24 வயதுக்கு குறைவானவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பதவிகளுக்கு ஆகஸ்ட் 01, 2022க்கு முன் அதிகாரப்பூர்வ இணையதளம் - rrcpryj.org மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க: 'அக்னிபாத்' திட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQ

Trending News