பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ திட்டமிட்டிருந்தால்; இந்த செய்தி உங்களுக்குத் தான்.
கடந்த நாட்களில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கி விற்கும் போக்கு தீவிரமடைந்துள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் விற்கப்படும் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்கள் உள்ளன. எனவே இது தொடர்பாக, தேவையான தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு சில மோசடி தளங்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இது குறித்து என்ன கூறியுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து, "இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை, பழைஅய் நோட்டுக்கள் மற்றும் காயின்களை விற்கும் பல்வேறு ஆன்லைன், ஆஃப்லைனில், சில தளங்கள் தவறாக பயன்படுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது. தளம் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பதற்கான கட்டணம்/கமிஷன்கள் அல்லது வரி கேட்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம், RBI முக்கிய அறிவிப்பு
ரிசர்வ் வங்கி இது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், அத்தகைய பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் கட்டணம் அல்லது கமிஷன் எதுவும் ரிசர்வ் வங்கி கேட்காது என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ எந்தவிதமான அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்று வங்கி கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி இது தொடர்பாக, யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்றும் ரிசர்வ் வங்கி இதுபோன்ற விஷயங்களைக் கையாள்வதில்லை அல்லது யாரிடமும் அத்தகைய கட்டணத்தையோ கமிஷனையோ கேட்பதில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி RBI தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி இது குறித்து கூறுகையில், “இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு நிறுவனம், நிறுவனம் அல்லது நபர் போன்றவற்றுக்கு ரிசர்வ் வங்கியின் சார்பாக எந்தவொரு கட்டணத்தையும் கமிஷனையும் வசூலிக்க எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. இதுபோன்ற போலியான மற்றும் மோசடியான சலுகைகளின் வலையில் சிக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது” என தெளிவுபடுத்தியது
மேலும் படிக்க | NPS vs PPF: அதிக வருமானம் அளிக்கும் திட்டம் எது? நிபுணர்களின் கருத்து இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR