ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடிச்சது மெகா ஜாக்பாட்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

கோடிக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ஒருபுறம் கூடுதல் ரேஷன் பலன் கிடைத்து வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டரின் பலனும் வழங்கப்படும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 3, 2023, 01:57 PM IST
  • AAY அட்டை வைத்திருப்பவருக்கு சிலிண்டரில் 475 ரூபாய் மானியம்.
  • சிலிண்டர் விலை ரூ.428.
  • 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.917 ஆகும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடிச்சது மெகா ஜாக்பாட்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

Ration Card Benefit : நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்து, அரசின் இலவச ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இப்போது இலவச ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு 475 ரூபாய் மானியத்துடன் கேஸ் சிலிண்டர் பலன்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவா அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி AAY அட்டை வைத்திருப்பவருக்கு சிலிண்டரில் 475 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் எல்பிஜி சிலிண்டர் நிரப்புவதற்கான (ரீஃபில்) முதலமைச்சர் நிதி உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இத்திட்டத்தின் கீழ், அந்த்யோதயா திட்ட அட்டைதாரர்களுக்கு மாநில அரசிடமிருந்து சிலிண்டருக்கு 275 ரூபாய் மானியம் வழங்கப்படும். இதனுடன் பிரதமர் மோடி அரசு தரப்பில் இருந்து எல்பிஜி சிலிண்டருக்கு ₹200 மானியம் தரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவா: சிலிண்டர் விலை ரூ.428
உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மத்திய மானியமாக ₹200 வழங்கப்படுகிறது. தற்போது அந்த்யோதயா யோஜனா ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ரூ.275 வழங்க கோவா அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் ரூ.200 மற்றும் ரூ.275 மானியத்துடன் மொத்தம் ரூ.475 மானியம் கோவா அரசால் வழங்கப்படும்.

மேலும் படிக்க | பெண் குழந்தைகளுக்கு பம்பர் பலன்கள்... ரூ. 50 ஆயிரம் தரும் மாநில அரசு!

உண்மையில் கோவாவில் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.917 ஆகும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ₹ 200 கழிப்புடன், அந்த்யோதயா மற்ற திட்டங்களில் ரூ 275 கழிக்கப்பட்டால், சிலிண்டரின் விலை ₹ 428 ஆக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், சிலிண்டரின் முழு விலையையும் கேஸ் ஏஜென்சியே செலுத்த வேண்டும். அதன் பிறகு, அந்தத் தொகை பயனாளிகளின் கணக்கிற்கு அனுப்பப்படும்.

கர்நாடகா: செப்டம்பர் 1 முதல் 10 வரை ரேஷன் கார்டில் திருத்தம்
இதனிடையே கர்நாடக அரசு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் கீழ், மாநில அரசில் பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்காக க்ரிஹ லக்ஷ்மி யோஜனா திட்டத்தில் பயன்பெறும் வகையில் ரேஷன் கார்டில் செப்டம்பர் 1 முதல் 10ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கார்டு மற்றும் அந்த்யோதயா அட்டையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மட்டுமே ரூபாய் 2000 நிதியுதவி பலனை பெற வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டில் ஒரு பெண்ணை முன்மொழிந்து ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரை மாற்றலாம். இதனால் அவர்கள் மாதாந்திர உதவியாக ₹2000 பெற அனுமதிக்கப்படுவார்கள். உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், 'செப்., 1 முதல், 10ம் தேதி வரை, பயனாளிகள் ரேஷன் கார்டில் மாற்றம் செய்து, நிதியுதவி பெறலாம் என்றார்.

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய, பயனாளிகள் பெங்களூரு 1, கர்நாடக வனம் மற்றும் கிராம வன மையத்தில் தங்கள் ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய முடியும். 

தெலுங்கானா: புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படலாம்
தெலுங்கானா மாநிலத்தை பற்றி பேசுகையில், இங்கு புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்து வருகிறது. வரும் நவம்பர் அல்லது டிசம்பர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 ஆண்டுகளாக ரேஷன் கார்டுக்காக பலர் காத்திருக்கின்றனர். புதிய ரேஷன் கார்டுகளுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்புதல் அளிக்கப்பட இருந்த போதிலும், போலி கார்டுகளை ஒழிக்கும் நோக்கில் டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் புதிய கார்டுகள் தயாரிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது. தற்போது தசரா மற்றும் தேர்தலுக்கு முன் புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்து விரைவில் புதிய ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

UP: கார்டு வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு
உத்தரபிரதேசத்தில் ரேஷன் கார்டுதாரரின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படும். 15 கோடி பயனாளிகளை ஆன்லைனில் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அரசின் இந்த முடிவுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல் தானியங்கள் மற்றும் இதர ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயனாளியும் கோட்டாருக்குச் சென்று இ-போஷ் இயந்திரம் மூலம் ஆதாரில் உள்ள கட்டைவிரல் ரேகையை சரிபார்க்க வேண்டும். அடுத்த 5 முதல் 6 மாதங்களில் இந்த செயல்முறையை முடிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 80,000 கடைகளில் எடை இயந்திரங்களும் பொருத்தப்படும். எடையிடும் இயந்திரம் இந்த இ-போஷ் இயந்திரத்துடன் நேரடியாக இணைக்கப்படும். இதன் காரணமாக இ-போஷ் இயந்திரம் பயனாளிக்கு எடை போடப்பட்ட தானியத்தின் அளவுக்கான ரசீதை உடனடியாக உருவாக்கும்.

ஹிமாச்சல்: செப்டம்பரில் 2 மாதங்களுக்கு ஒதுக்கீட்டை வழங்க முடிவு
இமாச்சலப் பிரதேச அரசு பெரும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன் கீழ், பயனாளிகளுக்கு 2 மாத ரேஷன் ஒரே நேரத்தில் வழங்க முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால் ரேஷன் கிடங்கிற்கு ரேஷன் பொருட்கள் வரவில்லை. நுகர்வோர் குறைந்த விலையில் ரேஷன் வாங்க முடியவில்லை. இப்போது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான ஒதுக்கீட்டை செப்டம்பர் மாதத்திலேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ அரிசியுடன் 14 கிலோ கோதுமை மாவு வழங்கப்படும். இதனுடன், மைசூர்ப் பருப்பு, கருப்பு உளுந்து மற்றும் சனா அல்லது மூங் தால் ஆகியவை வழங்கப்படும். இதனுடன் எண்ணெய், சர்க்கரை, 1 கிலோ உப்பு ஆகியவை மானியத்தில் வழங்கப்படும்.

மேலும் படிக்க | 7th pay Commission ஜாக்பாட் செய்தி: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... ஊதிய உயர்வு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News