ரேஷன் கார்ட் இல்லாமலும் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறலாம்: இதோ வழிமுறை

One Nation One Ration Card Scheme: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் இலவச உணவு தானியங்களைப் பெறலாம். அதன் செயல்முறையை அறியலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2022, 10:22 AM IST
  • இலவச ரேஷன் திட்டத்தில் பைகள் வழங்கவும் திட்டம் உள்ளது.
  • ரேஷன் கார்ட் தொடர்பான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
  • ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் ரேஷன் இலவசமாகக் கிடைக்கும்.
ரேஷன் கார்ட் இல்லாமலும் இலவசமாக ரேஷன் பொருட்களை பெறலாம்: இதோ வழிமுறை title=

புதுடெல்லி: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நாட்டின் பல மாநிலங்களில் மத்திய அரசு இலவச ரேஷன் வழங்கி வருகிறது. இப்போது அதே வழியில், பல மாநிலங்களில் இலவச உணவு தானியங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் கீழ், தலைநகர் பகுதியான டெல்லி-என்சிஆர் பகுதிகளிலும் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்' அமல்படுத்தப்பட்ட பிறகு, மற்ற மாநில மக்களும் இலவச ரேஷன் பெறுகின்றனர்.

இதுதவிர, உத்தர பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே ரேஷன் கார்டுகள் இல்லாத போதிலும், ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இலவச ரேஷன் பெறுவதற்கான முழுமையான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டு தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இதனுடன், புதிய ரேஷன் கார்டுகளுடன் பழைய ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கும் பணியும் நாடு முழுவதும் நடந்து வருகிறது. எனினும், இந்த வசதியைப் பெற, உங்கள் ரேஷன் கார்டு ஆதார் அட்டை அல்லது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். 

மேலும் படிக்க | Ration Card: ரேஷன் வாங்கும் முறையில் பெரிய மாற்றம், புதிய விதிகளின் விவரம் இதோ 

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பீகார், ஜார்கண்ட், உத்தராகண்ட் மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய இடங்களிலும் இடைநிறுத்தப்பட்ட அட்டைகள் சமீபத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

தில்லி அரசின் தரப்பில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் விநியோகம் இப்போது அனைத்து இ-பிஓஎஸ் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது. இப்போது இதன் கீழ், பயனாளிகள் கார்டு இல்லாமலும் இலவச ரேஷன் பெற முடியும். ஆனால் இதற்கு பயனாளிகளின் ரேஷன் அட்டை ஆதார் அட்டை அல்லது வங்கியுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாகும். 

இது தவிர, பயனாளியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ அல்லது சில காரணங்களால் ரேஷன் கடைக்குச் செல்ல முடியாமல் போனாலோ, உங்களுக்கு பதிலாக உங்கள் கார்டில் வேறு யாராவது ரேஷன் வாங்லாம் என்ற வசதியையும் டெல்லி அரசு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி! அரசு எடுத்த பெரிய முடிவு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News