மக்களுக்கு இன்ப அதிர்ச்சி; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2022, 06:42 AM IST
  • உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் மானியம்
  • பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு
  • ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்படும்.
மக்களுக்கு இன்ப அதிர்ச்சி; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு title=

நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு மத்திய அரசு மக்களுக்கு பெரும் நிம்மதியான செய்தியை அளித்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலையில் 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110ஐ கடந்துள்ளது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | உலக தரம் வாய்ந்ததாக மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்!

இதற்கிடையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் காரணமாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் டீசல், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு மீண்டும் உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்து வருகிறது. 

மீண்டும் வரி குறைப்பு 

இதற்கிடையே உக்ரைன் போரால் உற்பத்தி, வினியோக சங்கிலி பாதிப்பால் நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மக்களை சிரமத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில் தற்போது 45 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலை குறைகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50 ஆம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 ஆம் குறைந்துள்ளது. இதை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதன்படி சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 8.22 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 6.70 ரூபாயும் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

உஜ்வாலா கியாஸ் சிலிண்டர் மானியம்

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.1000-ஐ கடந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். 

இந்நிலையில், இந்த ஆண்டு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளிகளுக்கு ஒரு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியமாக வழங்குவோம் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு வழங்கப்படும். 

மேலும் படிக்க | பெகாசஸ் உளவு விவகாரம்...விசாரணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News