2015-2016ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் தனிநபர் ஈட்டும் வருமானத்தில் கோடீசுவரர்கள் குறித்த புள்ளி விவரங்கள் நேற்று வெளியிட்டது. இதை புள்ளி விவரத்தை வருமானவரி இலாகா வெளியிட்டது.
இந்தியாவில் 59,830 கோடீசுவரர்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 23.5% அதிகம். இவர்களது ஒட்டு மொத்த வருமானம் ரூ.1.54 லட்சம் கோடி ஆகும்.
> இதில் 55,331 தனிநபர்கள் ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரை வருமானம்.
> ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை 3,020 பேர்.
> ரூ.10 கோடியில் இருந்து ரூ.25 கோடி வரை 1,156 பேர்.
சம்பாதித்தாகவும் கணக்கு காட்டி உள்ளனர்.
நாட்டின் 120 கோடி மக்களில் வெறும் 4.07 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் இவர்களிலும் 82 லட்சம் பேர் ரூ.2.5 லட்சத்துக்கு கீழே வருமானம் ஈட்டியதாகவும் வருமான வரி இலாகாவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.