70 வது குடியரசுத் தினம் கொண்டாட்டம்: வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பெருமை

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2019, 08:16 AM IST
70 வது குடியரசுத் தினம் கொண்டாட்டம்: வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பெருமை title=

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று வருகிறார். முப்படை வீரர்களின் அணிவகுப்புடன் ராஜபாதையில் அனைத்து மாநில அலங்கார வாகன ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 

70 வது குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தில் தென்னாப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதம் நடைபெற இருக்க டெல்லி முழுவதும் தடுப்பு காவல் மூலம் அனைத்து வாகனங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கபட்டு உள்ளது. 

இதேபோல தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றுகிறார். இந்த விழாவில் செவீரர்களின் அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. வீர தீர செயல்களை புரிந்தோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கவுள்ளார். குடியரசு தின விழாவில் அமைச்சர்கள் உள்பட ஏராளமான விஐபிகள் பங்கேற்கின்றனர். இதனையடுத்து மெரினா கடற்கரை காமராஜர் சாலை சுற்றியும், சென்னையின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Trending News