செப்டம்பர் மாதம்: ஆதார் முதல் எல்பிஜி வரை - இதெல்லாம் அதிரடியா மாறப்போகுது

செப்டம்பர் மாதம் இன்னும் 2 நாட்களில் தொடங்க இருப்பதால் அம்மாதத்தில் வரப்போகும் புதிய மாற்றங்கள் மற்றும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 29, 2023, 01:10 PM IST
  • செப்டம்பர் மாத முக்கிய தேதிகள்
  • இந்த விஷயங்களை தவறவிடாதீர்கள்
  • ஆதார் இணைப்பு மிகவும் முக்கியம்
செப்டம்பர் மாதம்: ஆதார் முதல் எல்பிஜி வரை - இதெல்லாம் அதிரடியா மாறப்போகுது title=

ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து செப்டம்பருக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. புதிய மாதமான செப்டம்பரில் புதிதாக வரப்போகும் மாற்றங்கள் மற்றும் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆக்சிஸ் வங்கி மேக்னஸ் கிரெடிட் கார்டு கொள்கை மாற்றம்

Axis Bank Magnus கிரெடிட் கார்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் செப்டம்பர் 1, 2023 அன்று மாறும். ஆக்சிஸ் வங்கியின் இணையதளத்தின்படி, செப்டம்பர் 1 முதல் குறிப்பிட்ட பரிவர்த்தனைகள் எட்ஜ் விருதுகள் அல்லது வருடாந்திர கட்டணத் தள்ளுபடிகளுக்குத் தகுதிபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் பேங்க் மேக்னஸ் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 1, 2023 முதல் ரூ. 1,50,000 வரையிலான மொத்த மாதாந்திரச் செலவில் ஒவ்வொரு ரூ.200க்கும் 12 எட்ஜ் ரிவார்ட்ஸ் புள்ளிகளைப் பெறலாம். செப்டம்பர் 1 முதல், புதிய கார்டுதாரர்களுக்கான வருடாந்திர கட்டணம் ரூ.12,500 + ஜிஎஸ்டியாக உயர்த்தப்படும். ஏற்கனவே உள்ள பயனர்களுக்கு ஆண்டு கட்டணம் ரூ. 10,000 + ஜிஎஸ்டி இருக்கும்.

மேலும் படிக்க | New Tax Regime vs Old Tax Regime முக்கிய அப்டேட்: எது அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டது?

எல்பிஜி விலையில் மாற்றம் 

எல்பிஜி விலையும் ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் நாள், அரசு எண்ணெய் நிறுவனங்கள் எல்பிஜி விலையை மாற்றியமைக்கின்றன. இம்முறை செப்டம்பர் 1ம் தேதி எல்பிஜி கேஸ் விலையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் 14 கிலோ காஸ் சிலிண்டர் விலை மட்டும் சில மாதங்களாக மாறாமல் உள்ளது. எனவே இம்முறை எல்பிஜி விலை குறைய வாய்ப்புள்ளது.

சம்பளம் வாங்குபவர்களுக்கு விதி மாற்றம்

நீங்கள் வேலையில் இருந்தால், உங்கள் நிறுவனத்திடமிருந்து வீடு கிடைத்திருந்தால் அல்லது நிறுவனம் உங்களுக்கு வாடகை செலுத்தினால், இதோ உங்களுக்கான நல்ல செய்தி. CBDT சரியான மதிப்பீட்டிற்கான வரம்பை குறைத்துள்ளது. அதாவது இப்போது அலுவலகத்தில் இருந்து பெறும் வீட்டிற்கு பதிலாக சம்பளத்தில் குறைவான வரிச்சலுகை இருக்கும். அதாவது அதிக சம்பளம் கிடைக்கும். இந்த விதி அடுத்த மாதம் முதல் அதாவது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

ஆதார் புதுப்பிப்பு இலவசம்

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடுவை ஜூன் 14 முதல் செப்டம்பர் 14, 2023 வரை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பித்து 10 வருடங்கள் ஆகிவிட்டால், நீங்கள் இப்போது ஆதார் அட்டையைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

2,000 மாற்ற கடைசி நாள்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது. இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற நான்கு மாத கால அவகாசமும் அளித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த நோட்டுகளை மாற்ற வேண்டும். இந்த நோட்டுகளை மாற்ற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. வங்கிக்குச் செல்வதற்கு முன் விடுமுறையைப் பார்க்க மறக்காதீர்கள்.

சிறு சேமிப்பு திட்டத்திற்கான பான்-ஆதார் இணைப்பு

செப்டம்பர் 30, 2023க்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால், தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் அக்டோபர் 1, 2023 அன்று முடக்கப்படும். கணக்கைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குள், புதிதாக முதலீடு செய்ய விரும்பும் அல்லது சிறு சேமிப்புத் திட்டத்தைத் தொடங்க விரும்பும் புதிய பயனர்கள் ஆதார் தகவலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

டிமேட் கணக்கு

வர்த்தகம் மற்றும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் பரிந்துரை செய்ய அல்லது விலகுவதற்கான நேரத்தை இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) நீட்டித்துள்ளது. திருத்தப்பட்ட காலக்கெடு செப்டம்பர் 30, 2023 ஆகும்.

வங்கி FD முதிர்வு

பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை செப்டம்பர் 30, 2023 வரை கிடைக்கும். மூத்த குடிமக்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் அதிக FD வட்டி விகிதத்தைப் பெற முடியும். மூத்த குடிமக்களுக்கான ஐடிபிஐ அமிர்தா மஹோத்சவ் எஃப்டி திட்டமும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய உங்களுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது.

மேலும் படிக்க | இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News