நம் நாட்டில் தினம் தோறும் கோடிக்கணக்கானோர் ரயிலில் பயணிக்கின்றனர். முன்பதிவு எளிமையாக இருந்தாலும், அதிகமானோர் முன்பதிவு செய்வது காரணமாக டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினம் தான். அதனால் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக முன்பதிவு செய்யும்போது நம்மை அறியாமலேயே சில தவறுகளை செய்ய நேரிடும். சின்ன தவறு என்றாலும் அதனால் நீங்கள் ரயிலில் பயணிக்கும்போது அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் ஒன்று தான் முன்பதிவு செய்யும்போது பாலினத்தை தவறாக குறிப்பிடுவது. குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது இந்த தவறுகள் அதிகம் நடக்கிறது.
முன்பதிவு ரயில் டிக்கெட்டில் தவறு
அப்படி நீங்கள் முன்பதிவு செய்யும்போது ரயில் டிக்கெட்டில் பாலினம் தவறாக குறிப்பிட்டிருந்தால், உங்களின் ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. ஏனென்றால் ரயில் டிக்கெட்டில் முரண்பாடான தகவல்களை குறிப்பிடக்கூடாது. பொதுவாக இப்படியான தவறுகள் ரயில் பயணத்தின்போது அதிகம் கவனிக்கப்படுவதில்லை. இருப்பினும், பயணச்சீட்டுச் சரிபார்ப்புக்கு வரும் டிக்கெட் பரிசோதகர்(TDR), பயணிகளின் பெயர் சரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர்களின் விருப்பப்படி, பாலின தவறுகளை கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் தவறான தகவலைக் கூறி டிக்கெட்டை நிராகரிக்கும் அதிகாரமும் அவர்களுக்கு உள்ளது.
மேலும் படிக்க | நோ டென்ஷன்! செப்டம்பர் 14 பிறகு ஆதார் அட்டை முடக்கப்படாது.. ஆனால் அப்டேட் அவசியம்
பாலின தவறை திருத்துவது எப்படி?
ரயில் டிக்கெட்டில் பாலினப் பிழையை சரிசெய்ய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருந்தால், கவலைப்பட வேண்டாம். அருகிலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று நீங்கள் அதனை சரிசெய்து கொள்ள முடியும். தவறான டிக்கெட்டின் ஜெராக்ஸை, சரியான அடையாள அட்டையுடன், முன்பதிவு கவுண்டருக்கு செல்லுங்கள். அங்கு, அதிகாரிகள் தவறைச் சரிபார்த்து சரியான பாலினத்தை மாற்றி கொடுப்பார்கள்.
முன்பதிவு ரயில் டிக்கெட்டில் கவனிக்க வேண்டியவை
நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் பயணத்துக்கு முன்பே இந்த தவறை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் இந்த தவறை நீங்கள் சரிசெய்து கொள்ள முடியாது. பாலினம் குறித்து நீங்கள் தவறாக குறிப்பிட்டிருந்தால் கட்டாயம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று தான் அந்த தவறை திருத்திக் கொள்ள முடியும். இந்த விஷயம் ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தின்போது பெயர் மூலம் பாலினத்தை அடையாளம் கண்டுகொள்வது சிரமமான விஷயம். எனவே, ரயில்வே பயணிகள் முன்பதிவு செய்யும் போது தங்கள் டிக்கெட் விவரங்களை இருமுறை சரிபார்ப்பது இன்றியமையாதது.
ரத்து செய்யப்பட அதிகாரம் இருக்கும் அதேநேரத்தில் டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே எப்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது போதுமான நேரத்தை ஒதுக்கி பொறுமையாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யுங்கள்.
மேலும் படிக்க | வாழைப்பழம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாதா? மருத்துவர் சொல்லும் விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ