பெண்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவைப்படுகிறது. முறையான தூக்கம் இல்லை என்றால் அவர்களை மேலும் சோர்வடைய செய்யும்.   

Written by - RK Spark | Last Updated : Jul 28, 2024, 01:21 PM IST
  • ஆண்களை விட பெண்களுக்கு அதிக தூக்கம் தேவை.
  • 7 முதல் 8 மணி நேர தூக்கம் போதாது.
  • இது பெண்களை அதிக சோர்வடைய செய்யும்.
பெண்கள் ஒரு நாளுக்கு எவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்?  title=

நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் பலரும் சொல்லி கேட்டு இருப்போம். அனால் பெண்களுக்கு இந்த தூக்கம் போதாது. பல பெண்களுக்கு 8 மணி நேரம் நன்றாக தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக இருக்கும். இதனால் அன்றாட வேலைகளை செய்வதில் சிரமம் ஏற்படலாம். எனவே ஆண்களை விட பெண்களுக்கு அதிக நேரம் ஓய்வு தேவைப்படுகிறது. "ஆண்களை ஒப்பிடம் போது பெண்களுக்கு தூங்கும் நேரம் கூடுதலாக தேவைப்படுகிறது. பல ஆராய்ச்சிகள் இதனை உறுதிப்படுத்த உள்ளன" என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி முறையான தூக்கம் இருந்தால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் முறையாக வேலை செய்கிறது. மூளையின் செயல்திறன் தொடங்கி, இதய ஆரோக்கியம், வளர்சிதை மாற்றம், தோல் ஆரோக்கியம், முடி ஆரோக்கியம் போன்றவற்றை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க | புடவையில் ஒல்லியாக தெரிவது எப்படி? இதோ சில ஈசியான டிப்ஸ்!

நன்றாக தூங்கும் போது மன ஆரோக்கியம் அதிகரித்து மகிழ்ச்சியாக உணர வைக்கிறது. இதனால் அன்றாட வேலைகள் எளிதாக முடிகிறது. அதே சமயம் போதுமான தூக்கம் இல்லை என்றால், நரம்பியல் பிரச்சனை, உடல் பருமன், இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தும். தினசரி சரியான தூக்கம் இல்லை என்றால் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது. நியாபகமரதி, முடிவெடுக்கு திறன்களில் பாதிப்பு, உற்பத்தி திறன் போன்றவை குறைகிறது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒவ்வொரு விதமான தூக்கம் தேவைப்படுகிறது. பெரியவர்களுக்கு பொதுவாக 7 முதல் 9 மணி நேர தூக்கம் தேவை. வயதானவர்களுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது.

40 வயதிற்கு மேல் ஆகிவிட்டால் தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்று. இல்லை என்றால் ஒவ்வொரு பிரச்சனையாக அதிகரிக்க தொடங்கும். ஆண்களை விட பெண்களுக்கு 20 நிமிடம் அதிக தூக்கம் தேவை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மூளையின் முழுமையான சக்தியை பெறவும், ஆரோக்கியமாக இருக்கவும் தூக்கம் அவசியம். பொதுவாக பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட வித்தியாசமானதாகவும் சிக்கலானதாகவும் இருக்கும். பெண்கள் அதிகமாக அவர்களது மூளையை பயன்படுத்துகின்றனர். இது ஆண்களை விட சற்று அதிக தூக்கம் மற்றும் ஓய்வு தேவைப்படுகிறது. பெண்களுக்கு முறையான தூக்கம் இல்லை என்றால் பதட்டம், மனச்சோர்வு ஆகியவை அதிகரிக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தூக்கமின்மை ஆபத்து 40 சதவீதம் அதிகமாக உள்ளது.

பெண்களின் தூக்கம் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி நேரத்தில் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக சரியான தூக்கம் கிடைப்பதில்லை. மேலும், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தி தூக்கத்தை பாதிக்கிறது. ஆண்களை ஒப்பிடம் போது பெண்கள் அதிக வேலை செய்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால், வீட்டு வேலை முதல் அலுவலக வேலை வரை அனைத்தையும் செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை விட தங்கள் பொறுப்புகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் அவர்களது தூக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை.

மேலும் படிக்க | தொப்பை தெரியாமல் ஆடை அணிவது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News