இந்து மதத்தில் 12 மாதங்களில் மொத்தம் 24 ஏகாதசி விரதங்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் சிறப்பு வாய்ந்த ஏகாதசிகளாக கருதப்படுகின்றன. இன்று மாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியாகும். இது விஜய ஏகாதசியாக வழிபடப்படுகின்றது. இந்து பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, விஜய ஏகாதசி நோன்பைக் கடைப்பிடித்தால், பல வகையான பாவங்கள் அழிக்கப்பட்டு, நாம் செய்யும் அனைத்து பணிகளிலும் நமக்கு வெற்றி கிடைக்கும்.
காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், தாய்க்கு சமமான தெய்வமும், ஏகாதசிக்கு (Ekadashi) சமமான விரதமும் இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப் பட்டுள்ளது. ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.
ஏகாதசி விரத விதிகளை சரியாக பின்பற்றுவது அவசியம். இன்று என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று இங்கே பார்க்கலாம்.
ஏகாதசி விரத நாளில் என்ன செய்ய வேண்டும்
1.ஏகாதசி விரதத்தில் அன்னம் உண்ணக் கூடாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, நீர் மட்டுமோ, பழம் மட்டுமோ, அல்லது லேசான பலகார வகைகளை மட்டுமோ ஒட்கொள்ளலாம்.
2. ஏகாதசி விரதத்தை ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். உடலை வருத்திக்கொண்டு விரதம் இருக்கத் தேவையில்லை என இந்து சாஸ்திரம் பல இடங்களில் கூறியுள்ளது.
3. குழந்தை பாக்கியம் வேண்டி ஏகாதசி நோன்பு இருக்கும் அன்பர்கள், ஏகாதசி விரதம் இருந்து, கண்ணன் அல்லது நாராயணனின் படங்களுக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்யலாம். இப்படி செய்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
ALSO READ: பத்மநாபா ஏகாதசி விரதம்; தேவசயனி ஏகாதசி விரத மகிமைகள்... கடைப்பிடிக்கும் வழிமுறைகள்!
ஏகாதசியில் மறந்தும் இவற்றை செய்யாதீர்கள்:
1. ஏகாதசி விரதம் இருக்கும் நாளில் சூதாடக்கூடாது. அப்படி செய்தால் செய்யும் நபரின் பரம்பரை அழிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
2. ஏகாதசி விரதம் இருக்கும் போது தீய எண்ணங்களை வரவிடாமல், பெருமாளின் துதி பாடி தியானம் செய்ய வேண்டும். நம் எண்ணங்கள் நல்லதை நோக்கியே செல்ல வேண்டும்.
3. ஏகாதசி விரதம் இருக்கும் போது, களவாடுவதோ, பொய் சொல்வதோ கூடாது. இந்த நாளில் திருடுவதால், அந்த பாவம் அந்த நபரின் 7 தலைமுறைக்கும் போய் சேரும் என கூறப்படுகிறது.
4. ஏகாதசி விரதம் மூலம் பெருமாளின் அருளைப் பெற சாத்வீக உணவை உட்கொள்ள வேண்டும்.
5. இந்த நாளில், யாருடனும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. இனிமையாக பேச வேண்டும். இந்த நாளில், கோபமும் பொய்யும் தவிர்க்கப்பட வேண்டும்.
6. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்க வேண்டும்.
ஒவ்வொரு ஏகாதசி விரதமும் (Fast), பொதுவான பலன்களை அளித்தாலும், தனிப்பட்ட பலன்களையும் சேர்த்தும் வழங்குகிறது. அந்த வகையில், மாசி மாத ஏகாதசி வழி பாடு, முன்னோர்களின் முக்திக்கு வழி வகுக்கும்.
பிரம்மஹத்தி தோஷம் தாக்கியிருந்தால் நீங்கும். வாழ்வில் விரக்தி நிலையை நீக்கும். அகால மரணமடைந்தவர்கள் மோட்சம் பெற மாசி மாத ஏகாதசி வழிபாடு உதவும்.
ஆண், பெண் என்ற பாகுபாடின்றி, அனைவரும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். முக்கியமாக, பெண்கள் மாதவிடாய் காலத்திலும், பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு காலங்களிலும் கூட, ஏகாதசி விரதத்தை விடாமல் தொடரலாம்.
ALSO READ: இந்த 10 பொருட்களை நன்கொடையாக அளித்தால் உங்களுக்கு 10 மடங்கு லாபம்..!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR