லே - லடாக் டூர் செல்ல நல்ல சான்ஸ்... IRCTC வழங்கும் பட்ஜெட் பேக்கேஜ்..!!

IRCTC Ladakh Package : லடாக் மற்றும் லே ஆகிய இடங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று. லடாக் யூனியன் பிரதேசத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய பல அழகிய இடங்கள் உள்ளன. இங்கு நாடெங்கிலும் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 28, 2024, 03:33 PM IST
  • லே லடாக்கிற்குச் செல்ல சிறந்த நேரம் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரையிலான காலகட்டம்.
  • மூன்று வேளைக்கான உணவும் பேக்கேஜில் அடங்கும்.
  • IRCTC பேக்கேஜ் விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
லே - லடாக் டூர் செல்ல நல்ல சான்ஸ்... IRCTC வழங்கும் பட்ஜெட் பேக்கேஜ்..!! title=

IRCTC Ladakh Package : லடாக் மற்றும் லே ஆகிய இடங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று. லடாக் யூனியன் பிரதேசத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய பல அழகிய இடங்கள் உள்ளன. இங்கு நாடெங்கிலும் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். லடாக், லே ஆகிய இடங்களுக்கு நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். லே லடாக்கிற்குச் செல்ல சிறந்த நேரம் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் நடுப்பகுதி வரையிலான காலகட்டம் தான். நீங்கள் இங்கு ஒரு முறை வந்தால் போது, நீங்கள் இந்த இடத்தின் ரசிகராக மாறிவிடுவீர்கள், நிச்சயமாக ஒவ்வொரு வருடமும் இங்கு வர திட்டமிடுவீர்கள்.

IRCTC லடாக் பேக்கேஜ் விபரம்

ஜூலை மாதத்தில் லடாக் மற்றும் லே ஆகிய இடங்களுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், IRCTC பேக்கேஜ்களின் உதவியுடன் இங்கு வரலாம். லடாக் மற்றும் லேயின் இந்த பேக்கேஜ் டெல்லியில் இருந்து செல்பவர்களுக்கானது. நீங்கள் டெல்லிக்கு, ரயில் அல்லது விமானம் மார்க்கமாக உங்கள் ஊரில் இருந்து வரும் நிலையில், இந்த பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ளலாம் . DISCOVER LADAKH WITH IRCTC- LTC APPROVED (NDA12) என்ற இந்த பேக்கேஜ் ஜூலை 13 ஆம் தேதி டெல்லியில் இருந்து தொடங்கும். இந்த பேக்கேஜ் ஒவ்வொரு வாரமும் தொடங்குகிறது. ஜூலை 13 தவிர, ஜூலை மாதத்தில் 20 மற்றும் 27 ஆம் தேதிகளிலும் இந்த பேகேஜை பெற முன்பதிவு செய்யலாம்.

IRCTC பேக்கேஜ் பயண விபரம்

விஸ்தாரா ஏர்லைன்ஸ் மூலம் டெல்லியில் இருந்து லே வரை பயணிக்கலாம். லடாக் மற்றும் லேயின் இந்த பேகேஜ் 6 இரவுகள் மற்றும் 7 பகல்களுக்கானது. இந்த பேக்கேஜில் உள்ள நீங்கள் பார்க்கக் கூடிய மொத்த இடங்களின் எண்ணிக்கை 20 ஆகும். பேக்கேஜில் உள்ள பயண முறை விமான மார்க்கமாக இருக்கும், அதில் நீங்கள் டெல்லியில் இருந்து லே வரை விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பீர்கள். விமான டிக்கெட் எகானமி வகுப்பில் இருக்கும். இது தவிர லே, ஷாம் பள்ளத்தாக்கு, நுப்ரா, துர்டக், தாங் ஜீரோ பாயிண்ட், பாங்காங் போன்ற இடங்களை இந்த பேக்கேஜில் உள்ளடக்கும். இந்த பேக்கேஜில் நீங்கள் தங்கும் ஹோட்டல் மூன்று நட்சத்திர ஹோட்டலாக இருக்கும்.

மூன்று வேளைக்கான உணவும் பேக்கேஜில் அடங்கும்

லடாக் மற்றும் லேயின் இந்த பேக்கேஜில், உங்களை ஒரு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதுடன், ஏசி அல்லாத வாகனத்தில் ஊரை சுற்றிபார்க்க அழைத்துச் செல்லப்படுவீர்கள். இந்த பேக்கேஜில் நீங்கள் 3 இரவுகள் லேயில் தங்குவீர்கள், 2 இரவுகள் நுப்ராவில் மற்றும் 1 இரவு பாங்காங்கில் தங்குவீர்கள். உணவுக்கான செலவும் பேக்கேஜில் அடங்கும்.மூன்று வேளைகான உணவுகளும் உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜில் நீங்கள் 6 காலை உணவுகள், 6 மதிய உணவுகள் மற்றும் 6 இரவு உணவுகள் கிடைக்கும். இது தவிர, ஒவ்வொரு வாகனத்திலும் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பயணக் காப்பீடு மற்றும் இன்னர் லைன் பெர்மிட் ஆகியவையும் இந்த பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பத்ரி கேதார் செல்ல நல்ல வாய்ப்பு... IRCTC சார்தாம் யாத்திரை பேக்கேஜ் விபரம்..!!

IRCTC பேக்கேஜின் கட்டண விபரம்

பேக்கேஜ் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொண்ட நிலையில், இப்போது IRCTC வழங்கும் இந்த பேக்கேஜின் கட்டணம் என்ன என்பதையும், இந்த பேக்கேஜை நீங்கள் எப்படி முன்பதிவு செய்யலாம் என்பதையும் இப்போது கூறுவோம். இந்த பேக்கேஜை முன்பதிவு செய்ய வேண்டுமானால், அதற்கு குறைந்தபட்சம் ரூ.52,400 செலவழிக்க வேண்டும். இந்த கட்டணம் மூன்று பேர் பகிர்ந்து கொள்வதற்கானது. இந்த பேக்கேஜை இரண்டு பேர் பகிர்ந்து கொண்டால், 53,000 ரூபாய் செலவழிக்க வேண்டும். இது தவிர தனியாக பேக்கேஜ் புக் செய்தால் ரூ.58,400 செலுத்த வேண்டும். அதேசமயம் குழந்தைகளுக்கான பேக்கேஜின் கட்டணம் ரூ.50,900 முதல் ரூ.30,200 வரையில் இருக்கும். இந்த பேக்கேஜை ஆஃப்லைனில் முன்பதிவு செய்ய நீங்கள் IRCTC அலுவலகத்திற்குச் செல்லலாம். ஆன்லைனில் பேக்கேஜை முன்பதிவு செய்ய, நீங்கள் IRCTC இணையதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும், அங்கிருந்து இந்த பேக்கேஜை எளிதாக பதிவு செய்ய முடியும்.

மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News