February 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்: முழு விவரம் இதோ

அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பல மாற்றங்கள் நிகழப் போகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 29, 2022, 06:43 PM IST
  • பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
  • நாட்டின் முதல் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ பணப் பரிமாற்ற விதிமுறைகளை மாற்றுகிறது.
  • பிப்ரவரி 1 முதல் நடைபெறும் மாற்றங்களில் பேங்க் ஆஃப் பரோடாவின் காசோலை அனுமதி விதியும் உள்ளது.
February 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்: முழு விவரம் இதோ title=

Changes From 1st February: 2022 புத்தாண்டின் முதல் மாதம் அதாவது ஜனவரி நிறைவடையவுள்ளது. அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி முதல் தேதியில் இருந்து பல மாற்றங்கள் நிகழப் போகின்றன. பிப்ரவரி 1 ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 

இது நாட்டின் பொருளாதாரத்தின் பல அமசங்களை மாற்றும். பட்ஜெட் தவிர பிப்ரவரி 1 முதல் பல முக்கியமான மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இந்த மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

SBI பெரிய மாற்றங்களை செய்கிறது

நாட்டின் முதல் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) பணப் பரிமாற்ற விதிமுறைகளை மாற்றுகிறது. ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்வதற்கு வங்கி இப்போது ரூ.20 + ஜிஎஸ்டி கட்டணத்தை வசூலிக்கும். அதாவது, இப்போது நீங்கள் பணத்தை பரிமாற்றுவதற்கு அதிக செலவாகும். குறிப்பிடத்தக்க வகையில், அக்டோபர் 2021 இல், ரிசர்வ் வங்கி IMPS மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் ஐஎம்பிஎஸ் மூலம் ஒரு நாளில் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா விதிகளில் மாற்றம்

பிப்ரவரி 1 முதல் நடைபெறும் மாற்றங்களில் பேங்க் ஆஃப் பரோடாவின் காசோலை அனுமதி விதியும் உள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 1 முதல் காசோலை செலுத்துவதற்கான பாசிடிவ் பே ஊதிய முறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, இப்போது காசோலை தொடர்பான தகவல்களை அனுப்ப வேண்டும், அப்போதுதான் உங்கள் காசோலை கிளியர் ஆகும். இந்த மாற்றங்கள் ரூ. 10 லட்சத்திற்கு மேலான காசோலைகளின் கிளியரன்சுக்கானது. 

ALSO READ | Budget 2022: மின்சார வாகனங்களின் விலை குறையுமா? துறையின் கோரிக்கைகள் என்ன? 

கண்டிப்பு காட்டிய PNB 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) மாற்றப்பட்ட விதிகளின் தாக்கம் அதன் வாடிக்கையாளர்கள் மீது நேரடியாக இருக்கும். உங்கள் கணக்கில் பணம் இல்லாமல், தவணை அல்லது முதலீடு தோல்வியடைந்தால், நீங்கள் ரூ 250 அபராதம் செலுத்த வேண்டும். இதுவரை இந்த அபராதம் 100 ரூபாயாக இருந்தது. அதாவது, இப்போது நீங்கள் இதற்கு அதிக தொகை செலுத்த வேண்டும்.

எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம்

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி (LPG) விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பிப்ரவரி ஒன்றாம் தேதியன்று பட்ஜெட் தாக்கலும் இருப்பதால், அன்று எரிவாயு சிலிண்டரின் விலையில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் அதன் தாக்கம் மக்களுக்கு கண்டிப்பாக இருக்கும். 

புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை (Union Budget) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில், நேரடி மற்றும் மறைமுக வரி தொடர்பான விதிகளில் மாற்றங்கள் இருக்கக்கூடும். கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் சரிந்து வரும் சூழலில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மேலும் 5 மாநிலங்களில் தேர்தல் வர உள்ளதால், இந்த பட்ஜெட்டில் அரசு பல முக்கிய அறிவிப்புகளை செய்யக்கூடும் என நம்பப்படுகிறது.

ALSO READ | Budget 2022: விவசாயிகளுக்கான பல முக்கிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பு!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News