ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தம் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது!
21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைப்பெற்று வருகிறது. 71 நாடுகள் பங்கேற்று வரும் இந்த போட்டிகளில் பளுதூக்குதல், துப்பாக்கிச் சுடுதல், போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வானி தங்கம் வென்று அசத்தியுள்ளார். அதேபோன்று மற்றொரு வீராங்கனை அஞ்சு, வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்க பதக்கம் வென்றார். தற்போது., ஆடவர் மல்யுத்தம் 65kg பிரிவில் பஜ்ரங் தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்தியா 17 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம் என 36 பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் தொடரந்து நீடித்து வருகிறது.