அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தற்போதை விட சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என WHO தலைவர் டெட்ரோஸ் எச்சரிக்கை!!
உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அடினோம் ஜெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus), கொரோனா வைரஸ் தொற்று உலகின் கடைசி தொற்றுநோய் அல்ல என்றும், உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கால நெருக்கடிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல், எந்தவொரு பிரச்சினையையும் நாம் எளிதாக சமாளிக்க முடியும், இதற்காக, அனைத்து நாடுகளும் சுகாதாரத்துறையில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஜெபிரேசியஸ் செய்தி மாநாட்டில் அவர் கூறுகையில்... 'இது கடைசி தொற்றுநோயாக இருக்காது. தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை வரலாறு நமக்குக் கற்பித்துள்ளது. ஆனால் அடுத்த முறை ஒரு தொற்றுநோய் வரும்போது, அதை எதிர்கொள்ள நாம் அனைவரும் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
ALSO READ | மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covaxin இரண்டாம் கட்ட சோதனைக்கு ஒப்புதல்!!
தொழில்நுட்பங்களில் அதிக முன்னேற்றம் இருந்தபோதிலும், பல நாடுகள் இன்னும் தங்கள் பொது சுகாதார முறைகளை சரியான திசையில் பயன்படுத்த கவனம் செலுத்தவில்லை என்று அவர் கூறினார். இத்தகைய சூழ்நிலையில், அனைத்து நாடுகளும் பொது சுகாதாரத்துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என்றார்.
குறிப்பிடத்தக்க வகையில், மார்ச் 11 அன்று WHO கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. திங்களன்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இந்த தொற்றுநோயால் 890,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். நோய்த்தொற்று விஷயத்தில், இந்தியா இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.