Ola Employee: கொரோனா ஊரடங்குக்கு பிறகு, மின்சார வாகனத்துறையில் அபரிமிதமான ஏற்றம் இருந்து வரும்நிலையில், ரைட்ஷேரிங் நிறுவனமான ஓலா 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப் போகிறது. ஊடக அறிக்கையின்படி, ஓலா நிறுவனம் தனது சில ஊழியர்களுக்கு பிங்க் நிற சீட்டுகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், மீதமுள்ள ஊழியர்களின் வருடாந்திர மதிப்பீடு இன்னும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. முன்னதாக வெளியான செய்தியின் படி, ஓலா நிறுவனம் 400-500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான திட்டத்தை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பணிநீக்கம் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது.
இவ்வளவு பெரிய அளவிலான ஆட்குறைப்புக்குக் காரணம், ஓலாவின் எலக்ட்ரிக் மொபிலிட்டி வணிகத்தை அதிகரிப்பதற்காக செலவைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் தனது மின்சார வாகன வணிகத்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் அல்லது ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனத்தின் மனித வளம் (Human Resources) மறுகட்டமைக்காக செயல்முறை வரும் சில வாரங்களுக்கு தொடரலாம். தற்போது, நிறுவனம் தனது எலக்ட்ரிக் மொபிலிட்டி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. ஓலா நிறுவனம் மின்சார இயக்கம் வணிகத்திற்கான மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக மொபிலிட்டி, ஹைப்பர்லோகல், ஃபின்டெக் மற்றும் யூஸ்டு கார் பிசினஸ் ஆகிய அனைத்து துறையிலும் பணிநீக்கங்கள் செய்யப்படுகின்றன.
ஓலா நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆட்குறைப்புக்கு பெயர் இறுதி செய்யப்பட்டவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஓலாவின் ஊழியர் ஒருவர் கூறுகையில், நிறுவனம் யாரை வெளியேற்ற விரும்புகிறதோ, அவர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்யும் வகையில் அவர்களின் மதிப்பீட்டு செயல்முறையும் தாமதமாகிறது.
மேலும் படிக்க: டிரைவர்கள் இல்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் - ஓலா அதிரடி
இவை அனைத்ததையும் உன்னிப்பாகக் கண்காணித்து வரும் ஓலா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், நிறுவனம் ஆட்குறைப்பு செய்வதை விட நான்கு மடங்கு அதிகமான ஆட்களை எலக்ட்ரிக் கார் வணிகம் மற்றும் லித்தியம் அயன் உற்பத்தி வணிகத்திற்காக வேலைக்கு அமர்த்துவதாகக் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, ஓலா தனது எலக்ட்ரிக் கார் வணிகத்திற்காக மட்டும் 800 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது கூட பணிநீக்கம் செய்யப்பட்டதை விட அதிகமான ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவதாக அந்த நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
அத்தகைய சூழ்நிலையில், ஓலாவில் நடந்து வரும் இந்த ஆட்குறைப்பு செயல்முறை நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் செயல் அல்ல, மறுகட்டமைப்பு செயல்முறை என்று கூறலாம். இருப்பினும், ஓலா தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கூறப்படவில்லை.
மேலும் படிக்க: டெஸ்லாவுக்கு சிறப்பு சலுகை? இது நாட்டுக்கு நல்லதல்ல: கடுப்பாகி கமெண்ட் செய்த ஓலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ