Mohan Charan Majhi, Odisha: ஒடிசாவின் புதிய முதலமைச்சராக நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த பழங்குடி சமூகத்தின் முகமானா மோகன் சரண் மாஜி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை முதல்வராக கே.வி.சிங் தியோவும், பிரவதி பரிதாவும் பதவியேற்கவுள்ளனர். 52 வயதான மோகன் சரண் மாஜி கியோஞ்சார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நவீன் பட்நாயக்கின் ஆட்சிக்கு முற்றுபுள்ளி
பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகளாக ஆட்சிக்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. பாஜக சார்பில் ஒடிசா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக 52 வயதான மோகன் சரண் மாஜி பதவியேற்க உள்ளார்.
ஒடிஷா புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்வு
ஒடிசாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ., சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் நியமனம் குறித்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒடிசாவை தேசத்தின் நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் -மோகன் சரண் உறுதி
ஒடிசாவின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சரண் மாஜி கூறுகையில், "சட்டசபைத் தேர்தலில் பாஜகவைத் தேர்ந்தெடுத்த ஒடிசா மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் கட்சியை நம்பியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசாவை தேசத்தின் நம்பர் 1 மாநிலமாக மாற்ற உறுதியளிக்கிறேன். வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்" என்று கூறினார்.
மேலும் படிக்க - 'என்னை மன்னிக்கவும்...' அரசியலில் இருந்து விலகினார் வி.கே. பாண்டியன் - என்ன காரணம்?
மோகன் சரண் மாஜிக்கு வாழ்த்து சொன்ன ராஜ்நாத் சிங்
ஒடிசா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஸ்ரீ மோகன் சரண் மாஜி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒடிசாவின் புதிய முதலமைச்சராக மாநிலத்தை முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்லும் ஒரு இளம் மற்றும் ஆற்றல்மிக்க கட்சி காரியகர்த்தா ஆவார். அவருக்கு வாழ்த்துகள் என ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய மாநில அரசுக்கு இரு துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஸ்ரீ கே.வி. சிங் தியோவும், ஸ்ரீமதி. பிரவதி பரிதாவும் துணை முதல்வராகப் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்!' எனப் பதிவிட்டுள்ளார்.
Delighted to announce that Shri Mohan Charan Majhi has been elected unanimously as the leader of Odisha BJP Legislature Party. He is a young and dynamic party karyakarta who will take the state forward on road to progress and prosperity as the new Chief Minister of Odisha. Many…
— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) June 11, 2024
யார் இந்த மோகன் சரண் மாஜி?
ஒடிசாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கியோஞ்சர் சட்டமன்றத் தொகுதியில் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜியை 11,577 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மோகன் சரண் மாஜி வெற்றி பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் கியோஞ்சர் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் தொடர்ந்து அந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
அவரது சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பதுவதற்கு முன்பு, 1997 முதல் 2000 வரை சர்பஞ்சாக பணியாற்றினார். அவர் ORV சட்டத்தின் கீழ் SC மற்றும் ST இன் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
ஒடிசா முதல்வர் பதவியேற்பு விழா எப்பொழுது?
திட்டமிடப்படி நாளை (ஜூன் 12) புதிய பாஜக அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் மாஜி முதல்வராக பதவியேற்பார். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மதியம் 2:30 மணியளவில் புவனேஸ்வர் வந்து, அங்கிருந்து ராஜ்பவனுக்குச் செல்கிறார். மாலை 5 மணிக்கு ஜனதா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
ஒடிசா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற பாஜக
ஜூன் 4 அன்று, 147 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா சட்டசபையில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றது. மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, 21 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20-ஐ பாஜக வென்றது. அவற்றில் ஒன்று காங்கிரஸுக்குப் போனது.
மேலும் படிக்க - வி.கே. பாண்டியனை பொறியாக வைத்து பாஜக செய்த அரசியல்... நவீன் பட்நாயக் வீழ்ந்த கதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ