பேராசிரியர் பணியிடங்களை 6 மாதத்திற்குள் நிரப்ப UGC உத்தரவு!

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் விரிவுரையாளருக்கான பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப UGC உத்தரவு பிரப்பித்துள்ளது!

Last Updated : Jun 6, 2019, 09:32 AM IST
பேராசிரியர் பணியிடங்களை 6 மாதத்திற்குள் நிரப்ப UGC உத்தரவு! title=

நாடுமுழுவதும் உள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் விரிவுரையாளருக்கான பணியிடங்களை 6 மாதங்களுக்குள் நிரப்ப UGC உத்தரவு பிரப்பித்துள்ளது!

நாடு முழுவதும் உள்ள பல்கலைகழகங்களுடன் இணைந்ந்துள்ள கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் விரிவுரையாளருக்கான பணியிடங்களை நிரப்ப UGC(University Grants Commission)  எனப்படும் பல்கலைகழக மான்ய நிதிக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் கட்டுப்பாட்டில் நாடுமுழுவதும் 900 பல்கலைகழகங்கள் மற்றும் 40,000 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. 

இந்தியாவில் உள்ள 48 மத்திய பல்கலைகழகங்களில் மட்டும் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கான 5000 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இதற்கு தீர்வு காணும் விந்தாப பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசியர், விரிவுரையாளருக்கான பணியிடங்கள் 6 மாதங்களில் நிரப்பப்பட வேண்டும்.

கொடுக்கப்பட்ட 6 மாதங்களில் முதல் 15 நாட்களில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய தகவல்களை கண்டறிந்து ஜூன் 20ம் தேதிக்குள் தேசிய உயர் கல்வி வள மையத்தின் இணையத்தளத்தில் பதிவிட வேண்டும்.

இதன்பின்னர் 30 நாட்களுக்குள் அந்தந்த கல்வி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் இந்த பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்க வேண்டும். அடுத்த 15 நாட்களுக்குள் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை கேட்டு விளம்பரம் வெளியாக வேண்டும். அதேவேளையில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு குழு நியமிக்கப்பட வேண்டும். தேர்வு குழு கூட்டங்களுக்கான தேதிகளும் முடிவாக வேண்டும்.

நான்காவது மாதம் முடிவதற்குள் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு நேர்காணல் கடிதங்கள் அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் 5வது மாதம் நேர்காணல் நடத்தி பேராசியர்களை தேர்ந்தெடுக்க பட்டிருக்க வேண்டும் எனவும், 6-வது மாதம் முடிவதற்குள் தேர்ந்தெடுப்பட்டவர்களுக்கு நியமன கடிதங்கள் அளிக்கப்பட்டு அவை தேசிய உயர் கல்வி வள மையத்தின் இணையத்தளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Trending News