மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கும் அஜித் பவார்?...

மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வராக வியத்தகு முறையில் வெளியேறிய கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் அஜித் பவார் மீண்டும் அதே பதவிக்கு வர உள்ளார்.

Last Updated : Dec 24, 2019, 05:59 PM IST
மீண்டும் துணை முதல்வராக பதவியேற்கும் அஜித் பவார்?... title=

மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வராக வியத்தகு முறையில் வெளியேறிய கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) தலைவர் அஜித் பவார் மீண்டும் அதே பதவிக்கு வர உள்ளார்.

புதிய அமைச்சர்களைச் சேர்ப்பதன் மூலம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவையை விரிவுபடுத்தும் அதே நாளில் மகாராஷ்டிரா துணை முதல்வராக பதவியேற்க பவர் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இதுவரை எதிர்பார்க்கப்பட்ட இந்த முயற்சியில் மாநில அரசிடமிருந்தோ அல்லது ராஜ் பவனிடமிருந்தோ இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதி தகவல் எதுவும் இல்லை. 

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸிலிருந்து தலா இரண்டு அமைச்சர்கள் என ஆறு அமைச்சர்களைக் கொண்ட மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தில் அதிகபட்சமாக 42 அமைச்சர்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவார் இதற்கு முன்பு பாஜக-வுடன் கைகோர்த்து மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதல்வரானார். பின்னர் அவர் 'தனிப்பட்ட காரணத்தை' குறிப்பிட்டு பதவியில் இருந்து விலகினார், அதைத் தொடர்ந்து பட்னவிஸும் முதலமைச்சராக இருந்து விலகினார், அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஜக-வுக்கு பெரும்பான்மை இல்லை என அதற்கு காரணமும் தெரிவித்தார். பின்னர், உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்பார் என்று ஊகிக்கப்பட்டது.

1999-2014 முதல் காங்கிரஸ்-NCP கூட்டணி அரசு மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது அஜித் பவார் கடந்த காலத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இரண்டு குறுகிய காலத்திற்கு பணியாற்றினார். இந்த காலக்கட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக டிசம்பர் 20-ம் தேதி, விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகம் (VIDC) ஊழலில் ஊழல் தடுப்பு பணியகம் பவரை இந்த வழக்கில் இருந்து விடிவித்தது. இந்த விவகாரத்தில் எந்தவொரு கிரிமினல் குற்றங்களும் வெளியிடப்படாததால் 45 டெண்டர்கள் தொடர்பான வெளிப்படையான விசாரணை மூடப்பட்டுள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Trending News