புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி. : இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள்

Mahua Moitra : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, புடவையில் கால்பந்து விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

Written by - Chithira Rekha | Last Updated : Sep 19, 2022, 05:53 PM IST
  • புடவையில் கால்பந்து விளையாடிய மஹூவா மொய்த்ரா
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்
  • மொய்த்ராவுக்குக் குவியும் பாராட்டு
புடவையில் கால்பந்து விளையாடி அசத்திய எம்.பி. :  இணையத்தைக் கலக்கும் புகைப்படங்கள் title=

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ரா, பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கக் கூடியவர்களில் ஒருவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றிய அவர், கடந்த 2009-ம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், பின்னர் 2010-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

தனது தொகுதியான கிருஷ்ணாநகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியைப் பார்வையிடச் சென்ற அவர், அங்கு தானும் கால்பந்து விளையாடிய புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | ராகிங்கிற்கு எதிராக யுஜிசி எடுத்த அதிரடி முடிவு!

புடவையிலேயே அவர் கால்பந்து விளையாடியதற்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் அரசியல்வாதியுமான ஷர்மிஸ்தா முகர்ஜி, மொய்த்ராவின் பதிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ரா புடவையில் கால்பந்து விளையாடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கால்பந்தை ஊக்குவிக்க நடத்திய கேலா ஹோப் திவாஸ் நிகழ்ச்சியின்போதும் மஹூவா மொய்த்ரா தான் கால்பந்து விளையாடிய படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க | video: அப்பாவி நாயை பாடாய்படுத்திய டாக்டர் - இதுக்குதானா...?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News