ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கப்பணம் கொடுத்து நகை வாங்கினால், இனி 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஏப்ரல் 1-ம் தேதி இது அமலுக்கு வருகிறது.
2012-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல், ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் வாங்கினாலும், ரூ.5 லட்சத்துக்கு மேல் நகைகள் வாங்கினாலும் ஒரு சதவிகிதம் ரொக்க வரி விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது, ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால், அதற்கு ஒரு சதவிகிதம் ரொக்க வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்து, 2017-18 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இது, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.