பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைகளை மத்திய சட்ட கமிஷன் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக நாட்டில் உள்ளமத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகிறது. இந்நிலையில், மதச் சிறுபான்மையினரை பொது சிவில் சட்ட (Uniform Civil Code) வரம்பில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று AIMPLB,தெரிவித்துள்ளது. UCC தொடர்பான தங்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பல்வேறு தரப்பினருக்கும் பங்குதாரர்களுக்கும் ஜூலை 14 வரை சட்ட ஆணையம் அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) மீதான தனது ஆட்சேபனைகளை சட்ட ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. முஸ்லீம் பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினரை அத்தகைய சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வாரியம் அதன் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக பல வாதங்களை வழங்கியது. "சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியின சமூகங்கள் அவர்களது சொந்த சட்டங்களை பின்பற்ற அனுமதிப்பதன் மூலம் நமது நாட்டின் பன்முகத்தன்மையை பேணினால், தேசிய ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும்" என்று வாரியத்தின் அலுவலக செயலாளர் முகமது வகுருதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முஸ்லிம்களின் தனிப்பட்ட உறவுகள், அவர்களின் தனிப்பட்ட சட்டங்களால் வழிநடத்தப்படுகின்றன, அவை நேரடியாக புனித குர்ஆன் மற்றும் இஸ்லாமிய சட்டங்களிலிருந்து பெறப்பட்டவை மற்றும் முஸ்லிம் தனி நபர் சட்டத்தின் அம்சங்கள் அவர்களின் மத அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்த அடையாளத்தை இழக்க ஒப்புக் கொள்ள மாட்டார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய காலத்திற்குள், கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது குறித்து எந்த திட்டவட்டமும் இல்லாமல், அடுத்தடுத்து கமிஷன் மீண்டும் பொதுமக்களின் கருத்தைத் தேடுவது ஆச்சரியமாக இருக்கிறது. AIMPLB வரைவு தற்போதுள்ள சிவில் சட்டங்களை ஆய்வு செய்ததன் மூலம், தற்போதுள்ள பொது/ சீரான குடும்பச் சட்டங்கள் உண்மையிலேயே ஒரே மாதிரியானவை அல்ல என்பதோடு தற்போதுள்ள சமூக அடிப்படையிலான சட்டங்கள் கூட ஒரே மாதிரியானவை அல்ல என்ற முடிவுக்கு வந்தது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆன பொது சிவில் சட்டம் (UCC) வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், அதனை சில கட்சிகள் எதிர்த்தும் சில கட்சிகள் ஆதரித்தும் வருகின்றன. போபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரதீய ஜனதா கட்சி (BJP) நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் தேவை என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்ச்சிகரமான பிரச்சினையில் முஸ்லிம்கள் தவறாக தூண்டப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். ஒரு குடும்பத்தில் இரண்டு சட்டங்கள் இயங்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ