மகாராஷ்டிரா-வில் Spa என்னும் பேரில் விபச்சார விடுதி!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் பாலியல் புகாரில் ஈடுபட்டதாக தாய்லாந்த் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்!

Last Updated : Jan 21, 2018, 03:34 PM IST
மகாராஷ்டிரா-வில் Spa என்னும் பேரில் விபச்சார விடுதி! title=

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் பாலியல் புகாரில் ஈடுபட்டதாக தாய்லாந்த் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்!

மாவட்டத்தின் சில பகுதிகளில் திடிரென நடத்தப்பட்ட ரெய்டில், வெயார் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா-வில் இந்த 43 வயதான தாய்லாந்த் பெண்ணை கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி காவல்துறை ஆய்வாளர் பரிசோதகர் எஸ் தெரிவித்துள்ளார். 

ஸ்பா என்னும் பெயரில் விபச்சாரம் நடத்தி வந்ததாக அப்பெண்மனி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக கள்ளதனமாக இவ்வாறு அப்பெண்மனி செய்துவந்ததாக தெரிகிறது.

இந்த ரெய்டில் ஒரு தாயாலாந்த் பெண் உள்பட இரு இளம்பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பெண்மனிகள் 23 மற்றும் 25 வயதுடையவர்கள் எனவும், மீட்கப்பட்ட பின்னர் அவர்கள் காவல்துறை பாதுகாப்பின் கீழ் அனுப்பிவைக்கப் பட்டார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பெண் இம்மோல்ரல் ட்ராஃபிக் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜனவரி 23-ஆம் தேதிவரை காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News