தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அவர்களை கடவுள் ராமர் தோற்றத்தில் வரைந்து கட்சி தொண்டர்கள் பேனர் வைத்துள்ள சம்பவம் அணைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!
தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்று 4.5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியின் சாதனைகள் குறித்து அறிக்கையினை மக்களிடம் தெரியபடுத்த இன்று ‘பிரகதி நிவேதன சபா’ என்னும் பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
Telangana Chief Minister Kalvakuntla Chandrashekar Rao depicted as Lord Rama in a Telangana Rashtra Samithi(TRS) poster in Ranga Reddy district, ahead of the party's Pragathi Nivedhana Sabha which will be held later today pic.twitter.com/Py8bd2TOgQ
— ANI (@ANI) September 2, 2018
இந்த பொதுக்கூட்டத்திற்காக ஐதராபாத் அருகே உள்ள கொங்கர கலான் பகுதியில் அனைத்து வசதிகளுடன் 6,000 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி சார்பில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் 25 லட்சம் பேர் குறையாமல் பங்கேற்பர் என்பதால் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்பு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டும் 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இக்கூட்டத்திற்கு அருகாமையில் கட்சி புகழாரம் குறித்த பேணர்களும் இடம்பெற்றுள்ளன. இதில் ரங்கா ரெட்டி மாவட்டதை சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் முதல்வர் சந்திர சேகர் ராவ் அவர்களை ராமர் போல் சித்தரித்து பேனர் வைத்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!