சந்தேகப்பட்ட கணவரின் மண்டையை கிரிக்கெட் பேட்டால் உடைத்த மனைவி..

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் வீட்டில் 22 கேமரக்களை வைத்து  உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மடியை உடைத்த மனைவி!!

Last Updated : May 22, 2019, 01:23 PM IST
சந்தேகப்பட்ட கணவரின் மண்டையை  கிரிக்கெட் பேட்டால் உடைத்த மனைவி.. title=

மனைவி மீதுள்ள சந்தேகத்தால் வீட்டில் 22 கேமரக்களை வைத்து  உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மடியை உடைத்த மனைவி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் தனது மனைவி மீதுள்ள சந்தேகம் காரணமாக வீடு முழுவதும் உளவு பார்க்கும் கேமராக்களை மறைத்துவைத்துள்ளார். சமையலறை உட்பட  அனைத்து அறைகளிலும், 22 கேமராக்களை மறைத்து மனைவியை உளவு பார்த்துள்ளார். 2010 ஆம் திருமணமான அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு மனைவி மீது எழுந்த சந்தேகம் காரணமாக, ஸ்பை வேர் என்ற சாப்ட்வேர் மூலம், தனது மனைவியின் போன் கால்கள், மெசேஜ்கள் ஆகியவற்றை கண்காணித்துள்ளார். 

மேலும் ஒரு தனியார் துப்பறியும் நபரை வைத்தும் மனைவியை உளவு பார்த்து வந்துள்ளார். தன் மீது தவறில்லாத போது, கணவனின் இதுபோன்ற சந்தேக நடவடிக்கையால் கோபமடைந்த மனைவி, தனது மகனின் கிரிக்கெட் பேட்டை கொண்டு கணவனின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். 

தலையில் தையல்களுடன் காவல்நிலையம் சென்ற அந்த சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவி மீது புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த தம்பதியை கவுன்சிலிங்கிற்கு செல்லும் படி அறிவுரை வழங்கினர். எனினும் பல வாரங்கள் கவுன்சிலிங்கிற்கு பிறகும் தம்பதிகளை சேர்த்து வைக்க முடியவில்லை.

 

Trending News