நடிகர் Sonu Sood-க்கு கொரோனா தொற்று: தொடர்ந்து மக்களுக்கு உதவுவேன் என ட்வீட்டில் உருக்கம்

நடிகர் சோனு சூத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது சமூக ஊடக கணக்கில் இதை தெரிவித்த நடிகர் சோனு சூத், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 17, 2021, 02:51 PM IST
  • நடிகர் சோனு சூத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
  • அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
  • தனக்கு தொற்று உறுதியானதை சோனு சமூக ஊடக பதிவு மூலம் தெரிவித்தார்.
நடிகர் Sonu Sood-க்கு கொரோனா தொற்று: தொடர்ந்து மக்களுக்கு உதவுவேன் என ட்வீட்டில் உருக்கம் title=

புதுடெல்லி: நடிகர் சோனு சூத் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது சமூக ஊடக கணக்கில் இதை தெரிவித்த நடிகர் சோனு சூத், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் தான் நலமாக இருப்பதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும், இப்போதும் அவரை நாடலாம் என்றும் சோனு மக்களுக்கு தெரியப்படுத்தினார். 

தனது தொற்று நிலைமையைப் பற்றி எழுதிய சோனு சூத் (Sonu Sood), "அனைவருக்கும் வணக்கம், இன்று காலை எனக்கு COVID-19 தொற்று உறுதி செயப்பட்டது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நான் ஏற்கனவே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். ஆனால் யாரும் கவலைப் பட வேண்டாம். எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், எனக்கு உங்கள் அனைவருக்கும் உதவ இன்னும் அதிக நேரம் கிடைத்துள்ளது. நான் உங்க்களுக்கு உதவ எப்போதும் காத்திருக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்." என்று எழுதினார். 

சோனு சூத், புதன்கிழமை (ஏப்ரல் 7, 2021) கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொண்டார். 25 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி (Vaccine) செயல்முறையையும் அரசு விரைவில் துவங்க வேண்டும் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார். 

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட லாக்டவுனின் போது, புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளை அடைய உதவியதற்காக அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் சோனு சூத். மக்களுக்கு அவர் செய்த உதவிகளால் 47 வயதான அவரை பலர் கடவுளாகவே பார்த்தனர். தற்போது மக்களுக்கு மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அவர்  ஏற்படுத்தி வருகிறார்.

ALSO READ: Video: பொதுத்தேர்வை ரத்து செய்ய சோனு சூத் வலியுறுத்தல்!

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக "சஞ்சீவினி: எ ஷாட் ஆஃப் லைஃப்" - என்ற தடுப்பூசி பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார்.

சமீபத்தில், இந்தூரில் COVID-19 நோயாளிகளுக்காக 10 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை நடிகர் சோனு சூத் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களும் தற்போது COVID-19 தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.33 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,300 பேர் இறந்த நிலையில், இந்தியா மிக அதிக ஒற்றை நாள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,34,692  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 

இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16,79,740 ஆக உள்ளது. 

ALSO READ: COVID update: ஒரே நாளில் 2.34 லட்சம் பேர் பாதிப்பு, 1300 பேர் பலி, அச்சத்தின் உச்சியில் நாடு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ 

இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News