ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சி தலைவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஷா ஃபைசல் மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்டில் ரத்து செய்தது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370 வது பிரிவை மையம் ரத்து செய்ததிலிருந்து முக்கிய ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் கட்சி தலைவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஷா ஃபைசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.