நாட்டில் இரண்டாம் கட்ட அன்லாக் முடிவடைந்து, மூன்றாம் கட்ட அன்லாக் தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு தயாரித்து வரும் நிலையில், ஜிம்கள், தியேட்டர்கள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
வணிக நடவடிக்கைகளை தொடக்க வேண்டும் என ஜிம் உரிமையாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் கட்ட அன்லாக்கில் ஜிம்களை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது.
மத்திய அரசின் 2ம் கட்ட அன்லாக் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைய இருப்பதால், உள்துறை அமைச்சகம் 3ம் கட்ட அன்லாக்கிற்கான வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் கூறியது. உள்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 1 க்கு முன்பாக வழிகாட்டுதல்களை வெளியிடும் என கூறப்படுகிறது.
ALSO READ | கார்கில் வெற்றி தினம் 2020: கார்கில் மூலம் கல்வான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன
அன்லாக்கின் அடுத்த கட்டத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும். நாட்டில் மெட்ரோ சேவைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு. சினிமா அரங்குகள், தியேட்டர்கள் மற்றும் ஜிம்கள், தை நபர் விலகல் தொடர்பான கடுமையான விதிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடியிருக்கும்
பல்வேறு தேர்வு முடிவுகள் வந்துள்ளன. ஆனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தற்போது மீண்டும் திறக்க வாய்ப்பு மிக குறைவு.
இதுதொடர்பாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (HRD) அனைத்து மாநிலங்களுடனும் கலந்தாலோசிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் பெற்றோரிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன ர்ன மனித வள அமைச்சகம் முன்பு கூறியது. பள்ளிகள் தற்போது திறக்கப்படுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை என்று மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கூறியது.
ALSO READ | Work From Home: அதிர்ச்சிகரமான உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!
ஜிம் உரிமையாளர்களிடமிருந்து வரும் தொடர்ச்சியான கோரிக்கைகளின் அடிப்ப்டையில், மூன்றாம் கட்ட அன்லாக்கில் ஜிம்களை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதிக்கலாம்.
சினிமா அரங்குகள் நிலை என்ன?
நாடு முழுவதும் உள்ள சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கை வசதி கொண்ட சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டவுடன், அனைத்து மாநில அரசாங்கங்களும் எதைத் திறக்க வேண்டும், எதைத் திறக்கக்கூடாது என்பதற்கான தனது மாநிலத்திற்கான வழிகாட்டுதல்களை முன்வைக்கும்.
இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாக காகிதம் அல்லாத டிக்கெட்டுகள், இருக்கைகளுக்கு இடையில் தூரம், தீவிர சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை மார்ச் 24 விதித்தது முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சினிமா அரங்குகளும் மூடப்பட்டுள்ளன.