COVID-19 நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை சாத்தியமா? உச்ச நீதிமன்ற பதில் என்ன?

COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது பெயரளவு செலவில் சிகிச்சை தறக்கூடிய தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

Last Updated : May 27, 2020, 05:51 PM IST
COVID-19 நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை சாத்தியமா? உச்ச நீதிமன்ற பதில் என்ன? title=

COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது பெயரளவு செலவில் சிகிச்சை தறக்கூடிய தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த விஷயத்தை விசாரித்த தலைமை நீதிபதி எஸ். எ போப்டே தலைமையிலான அமர்வு, சில தனியார் மருத்துவமனைகளுக்கு இலவசமாக அல்லது பெயரளவு விலைக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளன, இந்த மருத்துவமனைகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும் என குறிப்பிட்டது.

நீதிபதிகள் ஏ எஸ் போபண்ணா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோரையும் உள்ளடக்கிய அமர்வு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வலியுறுத்துகையில்.,  "இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் நிலம் பெற்றுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டது.

இதையடுத்து இது ஒரு கொள்கை பிரச்சினை என்பதால் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான மேத்தா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் பதிலளிப்பதாகவும் மேத்தா குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் நெருக்கடி நேரத்தில்., கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் வணிக ரீதியாக சுரண்டுவதாக குற்றம் சாட்டிய வழக்கறிஞர் சச்சின் ஜெயின் தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் COVID-19 சிகிச்சைக்கான செலவைக் கட்டுப்படுத்துவதற்கான திசையைக் கோரிய இந்த மனுவில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்ற அமர்வு விசாரித்த போது இந்த முன்னேற்றம் வந்துள்ளது.

சலுகை விகிதத்தில் ஒதுக்கப்பட்ட பொது நிலங்களில் இயங்கும் அல்லது தொண்டு நிறுவனங்கள் என்ற பிரிவின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளை குறைந்தபட்சம் இப்போதைக்கு அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது, .

மேலும் COVID-19 நோயாளிகளுக்கு புரோ போனோ பப்ளிகோ (பொது நன்மைக்காக) அல்லது இலாப நோக்கற்ற அடிப்படையில் சிகிச்சையளிக்க இந்த மருத்துவமனைகள் முன் வர வேண்டும் எனவும் இந்த மனு வலியுறுத்துகிறது.

Trending News