ராஜீவ் கொலை வழக்கு-பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

Last Updated : Jan 24, 2018, 02:52 PM IST
ராஜீவ் கொலை வழக்கு-பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு!! title=

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுக்கு மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. 

இந்த முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் முன் விசாரணைக்கு வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய விருப்பமா என்பது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இதற்கு பதில் அளித்த மத்திய அரசு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

எனவே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை மீதான விசாரணை உச்ச நீதிமன்றம் பிப்-21க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Trending News