பிரதமர் மோடி நாளை அனைத்து MP-க்களுக்கும் இரவு விருந்தளிக்கிறார்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு விருந்தளிக்கிறார்..! 

Last Updated : Jun 19, 2019, 11:47 AM IST
பிரதமர் மோடி நாளை அனைத்து MP-க்களுக்கும் இரவு விருந்தளிக்கிறார்! title=

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாளை இரவு விருந்தளிக்கிறார்..! 

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வியாழக்கிழமை இரவு விருந்தளிப்பதாக தெரிவித்துள்ளார். இரவு உணவு தேசிய தலைநகரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அழைப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்தார்.

17ஆவது மக்களவையில் அறுதி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்திருக்கும் நிலையில், புதிய உறுப்பினர்கள், நேற்றும், அதற்கு முந்தைய தினமும் பதவியேற்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பரிந்துரை குறித்து, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் விவாதிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அதுகுறித்து, நாளை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். 

இதனைத் தொடர்ந்து, டெல்லி அசோகா ஹோட்டலில், நாளை இரவு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி விருந்தளிக்க உள்ளார். 

 

Trending News