#HimachalElection: பாஜக தலைமை செயலகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். 

Last Updated : Dec 18, 2017, 06:33 PM IST
 #HimachalElection: பாஜக தலைமை செயலகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்! title=

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 75.28 வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகளின் நேரடி பதிவு கீழே....


18:28 18-12-2017
டெல்லியில் உள்ள பாஜக தலைமை செயலகத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். தலைமை செயலகத்தில் தொண்டர்கள் கோலாகளமாக தங்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்!

 


17:34 18-12-2017

குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக-வின் வெற்றிக்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து!


17:31 18-12-2017

தற்போதைய வெற்றி நிலவரம்...
பாஜக - 23
காங்கிரஸ் - 13
கம்யூனிஸ்ட் - 1
சுயேட்சை - 1


17:21 18-12-2017

"என்னுடைய தோல்வி முக்கியம் அல்ல, கட்சியின் வெற்றி தான் முக்கியம், அந்த வெற்றியை தேடி தந்த மக்களுக்கு நன்ற" - துமால்!


16:52 18-12-2017

தற்போதைய வெற்றி நிலவரம்...
பாஜக - 17
காங்கிரஸ் - 10
கம்யூனிஸ்ட் - 1
சுயேட்சை - 1


16:45 18-12-2017

இமாச்சலத்தில் பாஜக-வின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்!

பா.ஜ.க.வின் பவன் நாயர் 1879 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்!


16:33 18-12-2017

பா.ஜ.க 29 இடங்களில் முன்னிலை, 15 இடங்களில் வெற்றி!
பா.ஜ.க.வின் சுபாஷ் தாகூர், பிலாஸ்பூர் தொகுதியில் 6862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
பா.ஜ.க.வின் கிஷோரி லால் 5983 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
பா.ஜ.க.வின் ஜியா லால் 7349 வாக்குகள் வித்தியாசத்தில் பாரமர் தொகுதியில் வெற்றி பெற்றார்


18 டிசம்பர் 2017, 15:57 PM

பா.ஜ.க.வின் வெற்றி குறித்து இமாச்சல் மாநில முதல்வர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வீரபத்ரா சிங், "நான் பி.ஜே.யின் வெற்றியை ஏற்றுக்கொள்கிறேன், முதல்வராக, நாங்கள் இங்கே எங்கள் செயல்பாடுகளை முழுமையாக செய்துள்ளோம்" என தெரிவத்துள்ளார்.


18 டிசம்பர் 2017, 15:55 PM

இமாச்சல் பிரதேசத்தின் 19 தொகுதிகலுக்கான முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!

வெற்றி விவரம்:-
பாஜக - 11
காங்கிரஸ் - 7
கம்யூனிஸ்ட் - 1


குஜராத், இமாச்சல் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி மூலம் நல்லாட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தலை வணங்குகிறேன். மேலும் ஓய்வின்றி மக்களுக்காக சேவை செய்வோம் என்று மோடி தெரிவித்துள்ளார். 


இமாச்சல் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் 68 இடங்களில் 15 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

பாரதிய ஜனதா கட்சி வெற்றி: 9 இடங்கள்
காங்கிரஸ் வெற்றி: 5 இடங்கள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வெற்றி: 1 தொகுதி


இமாச்சல் பிரதேசலத்தில் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக தயாராகி உள்ளது, 4 இடங்களை வென்றது.


இமாச்சல் பிரதேசம் தேர்தல் முடிவுகள்: பாவோன்டா சாஹிபில் இருந்து BJP வேட்பாளர் சுக் ராம் வெற்றி பெற்றார்.


காங்கிரஸ் வேட்பாளர் பவன் குமார் காஜல் காங்ராவில் வெற்றி பெற்றார்.


தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில்

பாஜக 40 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் 24 இடங்களில் முன்னிலை
மற்றவை- 4



தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேச தேர்தலில் பாஜக முன்னிலை. மேலும் தற்போது வரை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜக. மேலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. முழு விவரம் வெளியாகிகொண்டு வருகிறது.

 


இமாச்சல் பிரதேச தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை. முன்னிலையில் உள்ள நிலையில் இமாச்சல் பிரதேச பாஜக தொண்டர்கள் கொண்டாடுகிறார்கள்.

 

 


குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் போபால் பாஜக கட்சித் தொண்டர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

 


குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசங்களில் பாஜக வெற்றி முன்னிலையில் இருப்பதால் கட்சித் தொண்டர்கள் டெல்லி கட்சி தலைமையிடத்தில் கொண்டாடுகிறார்கள்.

 

 


பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் வருகை தரும் போது வெற்றி சைகை காண்பிக்கும் காட்சி.

 

 

 

 


பெரும்பான்மையுடன் இமாச்சல் மற்றும் குஜராத் மாநிலங்களில் பாஜக அரசு அமையும். "என்று  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகிறார்.

 

 


தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பாஜக 42 தொகுதியிலும், காங்கிரஸ் 22 இடங்களில் உள்ளது. 


சிம்லா கிராமத்தில் போட்டியிடும் விக்ரமாதித்யா சிங் கூறுகையில், " காங்கிரசின் வெற்றி பெரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது'.

 


தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில் பாஜக 38 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 22 இடங்களில் முன்னணியில் உள்ளது. மற்றவை 5.

 

 


தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில் அரக்கி என்ற இடத்தில் முதல்வர் வீரபத்திர சிங் 1162 வாக்குகளில் முன்னிலை.

 


தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில் முதல்வர் வீரபத்திர சிங் மகன் 1316 வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.

 


தற்போது நிலவரப்படி இமாச்சல் பிரதேசத்தில் பாஜக 35 இடங்களில் முன்னணியில் உள்ளது; காங்கிரஸ் 16 இடங்களில் முன்னணியில் உள்ளது. மற்றவை 3.

 


 

Trending News