கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இனி மின்சார விளக்குகள் வாங்குவதில் சிக்கல் இருக்காது. இந்தியாவின் எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) கிராமப்புறங்களில் சுமார் 60 கோடி பல்புகளை, ஒரு பல்பு 10 ரூபாய் என்ற விகிதத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது. 70 ரூபாய் விளக்குகளை எவ்வாறு 10 ரூபாய்க்கு வழங்க முடியும்? வாருங்கள் பார்க்கலாம்.
இந்த திட்டம் எந்த மானியமும் அல்லது அரசாங்க உதவியும் இல்லாமல் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. EESL இன் இந்த நடவடிக்கை மேக் இன் இந்தியா (Make In India) மற்றும் இந்தியாவின் காலநிலை மாற்ற செயலுத்தியை மேம்படுத்துவதற்கான ஊக்கமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கிராம உஜாலா திட்டமும் (Ujala Scheme) ஊக்க பெறும் என கருதப்படுகிறது.
10 ரூபாயில் கிடைக்கும் 70 ரூபாய் பல்பு:
EESL தற்போது உலகின் மிகப்பெரிய லைட்டிங் திட்டத்தை இயக்குகிறது. அரசாங்கத்தின் உஜாலா திட்டத்தின் கீழ், 2014 இல் 310 ரூபாய்க்கு விற்கப்பட்ட எல்.ஈ.டி பல்புகள் (LED Bulbs) இப்போது 70 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆனால் இப்போது கிராம மக்கள் இந்த பல்புகளை 10 ரூபாயில் வாங்குவார்கள். மீதமுள்ள 60 ரூபாயை கார்பன் வரவுகளிலிருந்து கிடைக்கும் வருவாயின் மூலமாக செலுத்தப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் தூய்மையான மேம்பாட்டு செயல்முறையின் (CDM) கீழ் கிராம உஜாலா திட்டத்தை அரசாங்கம் நடத்தி வருகிறது. இதில் கார்பன் க்ரெடிடுகளை நாம் கோருவதற்கான நன்மை கிடைக்கிறது.
ALSO READ: EPF ஓய்வூதியதாரர்களுக்கு இனி ஆயுள் சான்றிதழ் புதுப்பித்தல் இன்னும் எளிது!!
EESL இன் இந்த திட்டத்தின் முக்கியத்துவம்:
கிராம உஜாலா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 36 கோடி எல்.ஈ.டி பல்புகளில் ஐந்தில் ஒரு பங்கு அல்லது சுமார் 18 சதவீதம் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. கிராம உஜாலா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மின்சாரம் பெறுவதும் ஊக்குவிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறத் தயாராகி வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், EESL இன் இந்த நடவடிக்கை பல நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
10 மில்லியன் பல்புகளுடன் திட்டம் தொடங்கும்:
முதலாவதாக, இந்த திட்டத்தின் கீழ் 10 மில்லியன் எல்.ஈ.டி பல்புகள் வழங்கப்படும். இதற்காக மொத்தம் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். அதில் 600 கோடி ரூபாய் கிராமப்புற நுகர்வோரிடமிருந்து வரும். மீதமுள்ளவை கார்பன் கிரெடிட் வருவாயால் பூர்த்தி செய்யப்படும். இதேபோல், கிராமங்களுக்கு பல்புகள் பல கட்டங்களில் வழங்கப்படும். EESL இன் கூற்றுப்படி, தற்போது LED Bulb-களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. உஜாலா திட்டம் தடையற்ற மின்சார வழங்கலையும் உறுதி செய்யும்.
ALSO READ: BSNL-லின் தரவு வேகம் அதிகரிப்பு... எந்தெந்த பகுதியில் என தெரிந்து கொள்ளுங்கள்!!