PUBG விளையாட அனுமதிக்காத அண்ணனை கொலை செய்த தம்பி..

தனது அண்ணன் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் அவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த தம்பி!!

Last Updated : Jun 30, 2019, 03:19 PM IST
PUBG விளையாட அனுமதிக்காத அண்ணனை கொலை செய்த தம்பி.. title=

தனது அண்ணன் தன்னை பப்ஜி விளையாட அனுமதிக்க மறுத்ததால் அவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த தம்பி!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பிவாண்டியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் தனது மொபைல் போனில் PUBG கேம் விளையாடியதற்காக தனது மூத்த சகோதரர் தன்னை திட்டியதற்காக அண்ணனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

15 வயது சிறுவன் வீட்டில் அமர்ந்து இரவு முழுவதும் தொடர்ந்து PUBG விளையாடி கொண்டிருந்துள்ளான். இதை பார்த்த அந்த சிறுவனின் 19 வயது சகோதரன் முகமது ஷேக் என்பவன், ஏன் தொடர்ந்து PUBG விளையாடி கொண்டிருக்கிறாய் என்று கண்டித்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சகோதரன் என்றும் பாராமல் தனது அண்ணனை கத்திரிக்கோலால் சரமாரியாக குத்தியுள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டான். ரத்த வெள்ளத்தில் மிதந்த  முகமது ஷேக்கை அவனது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவனை பரிசோத்தித்த மருத்துவர்கள் முகமது ஷேக் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் தப்பியோடிய சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

Trending News