ரபேல் ஊழலின் உண்மை மறைக்கவே சிபிஐ இயக்குனர் மாற்றம் :ராகுல் காந்தி

கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 06:10 AM IST
ரபேல் ஊழலின் உண்மை மறைக்கவே சிபிஐ இயக்குனர் மாற்றம் :ராகுல் காந்தி title=

கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, அந்தமாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்துக்கொண்டு ராகுல்காந்தி பேசியது குறித்து சில தொகுப்பு:-

> மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆட்சி அமைத்த 10 நாட்களில் அனைத்து விதமான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும். 

> விவசாயிக்கு மண்டியில் நியாயமான விலை மற்றும் பணம் உடனடியாக கிடைக்கும். 

> விவசாயிகளுக்கு போனஸ் மற்றும் காப்பீடு பணம் கிடைக்கும். காங்கிரஸ் அரசாங்கத்தில் விவசாயிகளுக்கு பிரச்சனையை இருக்காது.

> இந்த பகுதியில்(உஜ்ஜனே) வசிக்கும் பெண் மின் கட்டணம் செலுத்த தவறியதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இந்தியாவில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றோர் பல கோடி கடன்களை வாங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அவர்களை பாஜக காப்பாற்றுகிறது.

> ஆனால் காங்கிரஸ் மக்களுக்காக வேலை செய்யும். மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்.

> ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. அதை மறைக்க பாஜக முயற்ச்சி செய்து வருகிறது.

> ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்று அச்சத்தில் சி.பி.ஐ. இயக்குனரை நீக்கினார்.

> இதுவரை ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான "ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்"(ஓஆர்ஓபி) திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், நடைமுறைப்படுத்தி விட்டதாக பொய் கூறி வருகிறார் பிரதமர் மோடி.

> காங்கிரஸ் ஆட்சியில் "ஒரு பதவி ஒரே ஓய்வூதியம்" திட்டம் கட்டயமாக நடைமுறைப்படுத்தப்படும்.

> எல்லையில் தீவிரவாதிகளால் பாதுகாப்புபடையினர் கொல்லப்படுகின்றனர். ஆனால் அதுக்குரித்து பாஜகவுக்கு கவலை இல்லை.

> கடந்த 15 ஆண்டுகளாக மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு எந்தவிதமான திட்டங்களோ, அவர்களின் முன்னேற்றத்திற்கு பாஜக ஒன்றும் செய்யவில்லை.

> இந்த முறை காங்கிரஸ்-க்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். மத்தியப் பிரதேசம் மாநிலம் வளர்ச்சி அடையும்.

Trending News