கேரளா நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் ராஜினாமா

கேரளா நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் திடீர் ராஜினாமா....

Last Updated : Nov 26, 2018, 11:54 AM IST
கேரளா நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் ராஜினாமா title=

கேரளா நீர்வளத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் திடீர் ராஜினாமா....

பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ டி தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து மேத்யூ தாமஸ் திடீர் பதவி விலகியுள்ளார். 

பத்தனம்திட்டை மாவட்டம் திருவல்லா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சி சார்பில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேத்யூ தாமஸ் பினராயி விஜயன் அரசில் நீர்வளத்துறை அமைச்சராகச் செயல்பட்டு வந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்து அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்.

இதையடுத்து, புதிய நீர்வளத்துறை அமைச்சராக மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் கிருஷ்ணன்குட்டி நாளை பொறுப்பேற்க உள்ளார். மேத்யூ தாமஸ் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

 

Trending News