நாடுமுழுவதும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்த புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட அபராதத்தை கர்நாடக அரசு சனிக்கிழமை குறைத்துள்ளது!
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மற்றும் பிற மாநிலங்களின் அடிப்படையில் போக்குவரத்து விதி மீறல் குற்றவாலிகளுக்கான கடுமையான அபராதங்களைக் குறைக்குமாறு போக்குவரத்துத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான லக்ஷ்மன் சவாடியை, முதல்வர் பி.எஸ்.எடியூரப்பானவை கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் இந்த அபராதம் குறைப்பு நிகழ்ந்த்துள்ளதாக கூறப்படுகிறது.
குறைக்கப்பட்ட அபராத விகிதங்கள் பின்வருமாறு:
- ஓவர் ஸ்பீடிங்: ரூ .1,000 (எம்.சி.ஜி) மற்றும் ரூ .2,000 (நான்கு சக்கர வாகனம்).
- ஆபத்தான வாகனம் ஓட்டுதல்: ரூ .1,500-ரூ .3,000
- பாதுகாப்பு பெல்ட் அணியவில்லை: ரூ .500
- ஹெல்மெட் இல்லாமல் பிடிபட்டால்: ரூ .500
- ஆம்புலன்ஸ் வழியைத் தடுப்பதற்கு: ரூ .1,000
- காப்பீடு இல்லாமல் பிடிப்பட்டால்: ரூ 1,000/2000 (எல்.எம்.வி) மற்றும் ரூ .4,000 (எச்.எம்.வி)
- பதிவு இல்லாமல்: ரூ .2,000 / 3000 (எல்.எம்.வி) மற்றும் ரூ 5,000 (எச்.எம்.வி)
- வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல்: ரூ .1,500 / 3,000 / 5,000
- உரிமம் இல்லாமல் பிடிப்பட்டால்: ரூ 1,000 / 2,000 / 5,000
எம்.வி.ஏ-வின் திருத்தப்பட்ட விதிகளுக்கு இணங்க, செப்டம்பர் 3-ம் தேதி மாநில அரசு போக்குவரத்து விதி மீறல்வாதிகளுக்கு கடுமையான அபராதங்களை அறிவித்து, செப்டம்பர் 4 முதல் தென் மாநிலம் முழுவதும் அபராதம் விதிக்கத் தொடங்கியது. இருப்பினும், இந்த உயர்வு மற்றும் அபராதங்களை குறைக்கக் கோரி பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா தெரிவிக்கையில், "மக்கள் தவறை உணர்ந்து நிவாரணம் தேடுவதால், அபராதங்களை பொருத்தமாகக் குறைக்க நான் போக்குவரத்துத் துறையிடம் தெரிவித்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.