90% வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடுகிறார் அமித் ஷா

கடும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தை பார்வையிடுகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 11, 2019, 10:05 AM IST
90% வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடுகிறார் அமித் ஷா title=

புதுடெல்லி: இன்று 90% கடும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தை பார்வையிடுகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், கடும் வெள்ளம் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 184-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் வான்வழி ஆய்வு ஒன்றை இன்று மேற்கொள்ளவுள்ளார். நமக்கு கிடைத்த தகவல்களின்படி, அமித் ஷா இன்று பிற்பகல் வெள்ளத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான பெலகாவிக்கு மாவட்டத்தை வான்வழி மூலம் பார்வையிட உள்ளார்.

கேரளாவின் வயநாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் நிலைமையை கட்டுப்பாடற்றதாக ஆக்கியுள்ளது, வயநாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் மேப்பாடி பஞ்சாயத்தின் புத்தமாலா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரழிவு மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தற்போது தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவின் வெள்ள நிலைமையை மதிப்பாய்வு செய்த முதல்வர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், வெள்ளத்தால் 24க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 1024 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மாநிலத்தில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்காக 20 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள், 10 இராணுவக் குழு, 5 கடற்படை அணிகள் மற்றும் 2 எஸ்.டி.ஆர்.எஃப் அணிகள் ஈடுபட்டுள்ளன, இதனுடன், இறந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடியூரப்பா அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Trending News