புதுடெல்லி: 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை ((Vande Bharat Express Trains) தயாரிப்பதற்கான புதிய டெண்டர்களுக்கு அரசு ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்தது.
தொழில்நுட்ப ஏலங்களை மதிப்பிடும்போது நிதி சலுகைகள் குறித்த சில விவரங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதால் முந்தைய டெண்டர் செயல்முறை ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது.
டெண்டருக்கு இரண்டு பிரிவுகளாக ஏலங்கள் கோரப்படுகின்றன: முதலாவது தொழில்நுட்ப ஏலம் (Technical Bids), இரண்டாவது நிதி ஏலம். முதலில் தொழில்நுட்ப ஏலங்கள் திறக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. அதன் பிறகு தொழில்நுட்ப ஏலங்களில் தகுதியுடையவர்களாகக் கண்டறியப்பட்ட அந்த ஏலதாரர்களின் நிதி ஏலம் (Financial Bids) திறக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
"முழுமையான வெளிப்படைத்தன்மையை பராமரிக்க, டெண்டரை ரத்துசெய்து புதிய டெண்டர்களை அழைக்க குழு பரிந்துரைத்தது. டெண்டரை ஏற்றுக்கொள்ளும் அதிகாரப்பூர்வ உரிமை படைத்த, ICF பொது மேலாளர் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டார். ஒரு வாரத்திற்குள் புதிய டெண்டர்கள் கோரப்படும்" என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்தார்.
ALSO READ: இந்திய ரயில்வே புதிய பரிசு, 44 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடர்பான நல்ல செய்தி
திருத்தப்பட்ட பொது கொள்முதல் (இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை) உத்தரவு மற்றும் "ஆத்மனிர்பர் பாரத்" முயற்சியின் ஒரு பகுதியாக புதிய டெண்டர் விரைவில் வெளியிடப்படும் என்று ரயில்வே முன்பு கூறியது.
புதிய ரயில் டெண்டரில் இந்திய ரயில்வேயின் மூன்று உற்பத்தி பிரிவுகளிலும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான காலக்கெடு சுருக்கப்படும் என்றும் யாதவ் கூறினார்.
ஜூலை 10 ம் தேதி, சென்னையில் உள்ள ICF, செமி அதிவேக வந்தே பாரத எக்ஸ்பிரஸ் ரயில்களின் 44 ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான டெண்டரை வெளியிட்டது.
வெள்ளிக்கிழமை, 44 செமி அதிவேக வந்தே பரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டரை ரத்து செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்திருந்தது. கடந்த மாதம் டெண்டர் திறக்கப்பட்டபோது, ஆறு போட்டியாளர்களில் ஒரே ஒரு வெளிநாட்டு நிறுவனமாக, ஒரு சீன நிறுவனம் மட்டுமே இருந்ததால், டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: அடுத்த 2 ஆண்டுகளில் 40 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்