புதுடில்லி: இந்தியாவின் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்களில் எல்லாம் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்று கூறிய, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்திய முஸ்லிம்கள் தான் உலகில் உள்ள முஸ்லிம்களில் மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சுயநலத்திற்காக அனைத்து வகையான மதவெறி மற்றும் பிரிவினைவாதம் பரப்புபவர்கள், அதனாலேயே பாதிக்கப்படுவார்கள் என்றார்.
ALSO READ | பாகிஸ்தான் ISI-க்கு ராணுவ ரகசியங்களை வழங்கிய HAL ஊழியர் கைது..!!!
முகலாய பேரரசர் அக்பருக்கு எதிராக, மேவார் மன்னர் மஹாராணா பிரதாப்பின் இராணுவத்தில் பல முஸ்லிம்கள் போராடியதை மேற்கோள் காட்டி, பகவத் இந்தியாவின் வரலாற்றில் நாட்டின் கலாச்சாரத்தின் மீது தாக்குதல் நடத்தும்போதெல்லாம் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கூறினார்.
"உலகில் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று பகவத் கூறினார். ஒரு நாட்டின் மக்களை ஆட்சி செய்த ஒரு வெளிநாட்டை சேர்ந்த மதம் இன்னும் அங்கே இருக்கின்றது என்பதற்கு உலகில் ஏதேனும் உதாரணம் இருக்கிறதா என்று அவர் வினவினார்.
"எங்கும் இல்லை. இது இந்தியாவில் மட்டுமே உள்ளது" என்று அவர் மகாராஷ்டிராவை தளமாகக் கொண்ட ஒரு இந்தி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்தியாவைப் போல், பாகிஸ்தான் மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு எந்த உரிமைகளையும் வழங்கவில்லை, அது முஸ்லிம்களுக்கான தனி நாடாக உருவாக்கப்பட்டது. "இந்துக்கள் மட்டுமே இங்கு வசிக்க முடியும் என்று நமது அரசியலமைப்பு கூறவில்லை; நீங்கள் இங்கே தங்க விரும்பினால், நீங்கள் இந்துக்களின் மேன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எங்கும் கூறப்படவில்லை. இது அனைவருக்கும் ஆன நாடு. அனைவருக்கு இடமளிக்கும் அந்த உள்ளார்ந்த உணர்வு, இந்து என்று அழைக்கப்படுகிறது, "என்று அவர் கூறினார்.
ALSO READ | ராஜஸ்தானில், கோயில் நில ஆக்கிரமிப்பை எதிர்த்த பூசாரி உயிருடன் எரித்து கொலை..!!!
இந்து என்பது ஒருவர் யாரை வழிபடுகிறார்கள் என்பதை பொருத்தது அல்ல. மதம் என்பது அனைவரையும் ஒரே நூலில் இணைத்து, ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும்.
"இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்த உணர்வு ஏற்படுபோதெல்லாம், மதங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்து, எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றாக நிற்கிறார்கள்" என்று பகவத் கூறினார்.
அயோத்தியில் உள்ள ராம் கோயில் பற்றி பேசிய பகவத், இது வெறும் ஆன்மீக நோக்கத்திற்கானது அல்ல, இந்த கோயில் தேசிய விழுமியங்கள் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகும்.
"உண்மை என்னவென்றால், இந்த நாட்டு மக்களின் மன உறுதியையும் , கலாச்சாரத்தையும் அழிப்பதற்காக, கோயில்கள் அழிக்கப்பட்டன. அதனால்தான் கோவில்களை புனரமைக்க இந்து சமூகம் நீண்ட காலமாக விரும்பியது. அதனால் தான் மீண்டும் ராமர் ஆலயத்தை கட்டியெழுப்ப விரும்புகிறோம். எனவே இந்த பிரமாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது, "என்று அவர் கூறினார்.
ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பின், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான 'பூமி பூஜை' விழா ஆகஸ்ட் மாதம் செய்யப்பட்டது.