மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை..!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெரிவிப்பு!!

Last Updated : Jul 15, 2019, 07:57 AM IST
மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை..! title=

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெரிவிப்பு!!

MBBS இறுதியாண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களே MD/MS படிப்புகளுக்கான சேர்க்கைக்குப் போதுமானதாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

"நெக்ஸ்ட்' எனப்படும் "நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' நாடு தழுவிய அளவில் ஏற்கெனவே நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்கு இந்த தேர்வு முடிவுகளே போதுமானது எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்; MBBS இறுதி ஆண்டு தேர்வை முடித்த பிறகு, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக அவர்கள் நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வும் எழுத வேண்டியது இல்லை. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல், MBBS முடித்த பிறகு, டாக்டராக தொழில் செய்வதற்கான லைசென்ஸ் பெற மாணவர்கள் எந்த தேர்வும் எழுத வேண்டியது இல்லை.

இருப்பினும், ‘எய்ம்ஸ்‘ மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை நீடிக்கும். டி.எம்., எம்.சிஎச் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வும் நீடிக்கும். அங்கீகாரம் இன்றி டாக்டர் தொழில் செய்பவர்களுக்கு ஓராண்டுவரை கடும் காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் ஒரு திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

 

Trending News