சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் வருமான வரி துறையினரின் சோதனை தொடங்கினர். இந்த சோதனையில் 8 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
2006-ம் ஆண்டில் மும்பையில் தொடங்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பெற உதவியதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்தது.
இதனால் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு தப்பித்துவிடக் கூடாது என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் சென்று வெளிநாடு செல்ல அனுமதி பெற்றார். இதனிடையே அமலாக்கத்துறை அவரிடம் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.. சிபிஐ அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவரது வீட்டில் நடந்த வருமான வரி துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
அமலாக்க துறை கூடுதல் இயக்குநர் உத்தரவின்பேரில் நடந்த இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அருண் நடராஜன் கூறியுள்ளார் .
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் கூறுகையில்:-சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. மேலும் சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என அமலாக்கத்துறை சோதனை குறித்து ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எந்த அமைப்பினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. உச்சநீதிமன்றம் நேற்று என்னுடைய மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது
மேலும்,எந்த அமலாக்கத்துறைக்கும் இதுகுறித்து விசாரிக்க தகுது இல்லை என்றார்.
There is no FIR concerning a scheduled crime by CBI or any agency. I anticipated they'll search premises in Chennai again but in a comedy of errors they came to Jor Bagh (in Delhi) & officers told me that they thought Karti is an occupant of this house but he is not-P.Chidambaram pic.twitter.com/Nh6K9TNgG5
— ANI (@ANI) January 13, 2018