Tractor Rally வன்முறை தொடர்பாக பாரதிய கிசான் யூனியனுக்கு Delhi Police நோட்டீஸ்

பாரதிய கிசான் யூனியனுக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்து, வன்முறைகளில் ஈடுபட்டது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2021, 02:46 PM IST
  • குடியரசு தின வன்முறை தொடர்பாக டெல்லி போலீஸ் நோட்டீஸ்
  • பாரதிய கிசான் யூனியன் மூன்று நாட்களில் பதிலளிக்க வேண்டும்
  • விவ்சாயிகளின் போராட்டம் நடத்த தங்கியிருக்கும் கூடாரங்களின் வெளியிலும் நோட்டீஸ்
Tractor Rally வன்முறை தொடர்பாக பாரதிய கிசான் யூனியனுக்கு  Delhi Police நோட்டீஸ் title=

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணி டெல்லியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக குடியரசு தினவிழாவன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு  முன்னதாக டெல்லிக்குள் நுழைந்த பேரணியினர், ஒப்புக்கொள்ளப்பட்ட பாதைகளை மீறி, வேறு பாதைகளிலும் சென்று அத்துமீறினார்கள். அத்துடன், செங்கோட்டையை முற்றுகையிட்டு அங்கு கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியைத் தவிர வேறு சில கொடிகளையும் ஏற்றியது அதிர்ச்சியளித்தது.

இது தொடர்பாக, பாரதிய கிசான் யூனியனுக்கு டெல்லி போலீஸ் (Delhi Police) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி நுழைந்து, வன்முறைகளில் ஈடுபட்டது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது.

ஜனவரி 26 ம் தேதி டிராக்டர் பேரணி தொடர்பாக போலீசாருடனான ஒப்பந்தத்தை மீறியதற்காக அவர் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேள்வி கேட்டுள்ள டெல்லி காவல்துறை, இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு டெல்லி காவல்துறை பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்காயிட் (Rakesh Tikait) என்பவருக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியில் கூடாரம் அமைத்து அமர்ந்திருக்கும் விவசாயிகளின் கூடாரங்களுக்கு வெளியிலும் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

விவசாயிகள்

அந்த நோட்டீஸில், "வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட உங்கள் யூனியனை சேர்ந்தவர்களின் பெயர்களை வழங்கவும் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிரது. உங்கள் பதிலை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது" என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்காயிட் பேசும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இந்த நிலையில், டெல்லியின் சிங்கு எல்லைப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அங்கு கூடியுள்ளனர். அந்தப் பகுதியில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருப்பவர்கள் அங்கிருந்து காலி செய்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கு போன்ற டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து வந்திருக்கும் விவசாயிகள் தங்கள் போராட்டம் நடத்துவதர்காக முகாமிட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Also Read | Tractor பேரணியில் கலந்துக் கொண்ட விவசாயி கொலை, போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News