குடியுரிமை சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விஷயம் -சீனா தூதரகம்!

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில், இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சீனத் தூதரக ஜா லியோ தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 19, 2019, 08:53 AM IST
குடியுரிமை சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விஷயம் -சீனா தூதரகம்! title=

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களின் பின்னணியில், இது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என சீனத் தூதரக ஜா லியோ தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையை இந்தியா உள் மட்டுமே தீர்க்க வேண்டும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “இது இந்தியாவின் உள் விஷயம். இது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை. இது உங்கள் நாடு, உங்கள் சொந்த பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்,” என்று லியோ ஒரு நிகழ்ச்சினியின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவும் சீனாவும் ஒரு சிறந்த உறவைப் பகிர்ந்து கொள்கின்றன, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மற்றும் சீனா ஒன்றுசேர்ந்து போராட வேண்டிய நாள் இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டம், இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களை தூண்டியுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி குடியுரிமை திருத்த சட்ட எதிர்பார்ளர்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத ரீதியான துன்புறுத்தல்களைத் தொடர்ந்து 2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் முயல்கிறது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கடந்த வாரம் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்து கவலை தெரிவித்தது, இந்த சட்ட திருத்தமானது இயற்கையில் “அடிப்படையில் பாரபட்சமானது” என்று கூறியது. இந்நிலையில் தற்போது ஜா லியோ கருத்து வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News