Paralympic Games: வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு இந்தியா வாழ்த்து

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் பட்டேல், இந்தியாவுக்கு வெள்ளியை வெற்றியாக பரிசளித்துள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 29, 2021, 10:48 AM IST
  • பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்
  • டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்
  • தீபா மாலிக்கிற்கு பிறகு பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை பவினா
Paralympic Games: வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு இந்தியா வாழ்த்து title=

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் பட்டேல், இன்று இந்தியாவுக்கு வெள்ளியை வெற்றியாக பரிசளித்துள்ளார்.  

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் பவினாவின் 'அபாரமான சாதனைக்காக' இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.

"பவினா படேல் இந்திய அணியின் விளையாட்டு வீராங்கனை. பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார் பவினா படேல். உங்கள் அசாதாரண உறுதியும் திறமையும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. இந்த அசாதாரண சாதனைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குடியரசுத் தலைவர் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாவைப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "பவினா பட்டேல் குறிப்பிடத்தக்க வரலாற்றை எழுதியுள்ளார்! நாட்டுக்காக வரலாற்று சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை பெற்றிருக்கிரார். தாயகத்திற்கு வெள்ளியைப் பெற்றுத்தந்த வெள்ளி மங்கையை வாழ்த்துகிறோம். பவினாவின் வாழ்க்கை பயணம் ஊக்கமளிக்கிறது மற்றும் விளையாட்டுகளை நோக்கி அதிக இளைஞர்களை ஈர்க்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாராலிம்பிக் கமிட்டி ஆஃப் இந்தியா (Paralympic Committee of India) அமைப்பின் தலைவரான தீபா மாலிக், விளையாட்டுப் போட்டிகளில் பவினாவின் பரபரப்பான நடிப்பிற்காக பாராட்டினார். "வாழ்த்துக்கள் பவினா படேல், தேசிய விளையாட்டு நாளான இன்று நாட்டுக்காக நீங்கள் பதக்கம் வென்றது மிகவும் அற்புதமானது. இது நாட்டுக்கும், விளையாட்டுக்கும் நீங்கள் பரிசை கொண்டு வந்த நன்னாள்" என்று தீபா மலிக் (Deepa Malik) வீடியோவை வெளியிட்டுள்ளார். 

34 வயதான பவினா பட்டேல் தனது முதல் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவின் Ying Zhouவிடம் 7-11, 5-11, 6-11 என்ற செட்களில் தோற்றுப் போனார். இந்த இறுதிப்போட்டி 19 நிமிடங்கள் நீடித்தது.

2016 ஆம் ஆண்டில் எஃப் 43 ஷாட் புட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபா மாலிக்கிற்கு பிறகு பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை பட்டேல். 

இந்த வெள்ளிப் பதக்கத்தை என் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன். எனது பயிற்சியாளர், குடும்ப உறுப்பினர்கள்கள் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று பாவினா படேல் தெரிவித்துள்ளார்.

1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 29ம் தேதி, இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.  

Also Read | 54 ஆண்டுகளுக்குப் பிறகு லீட்ஸில் மோசமான தோல்வியை சந்தித்த இந்தியா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News