மிகவும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கை மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட்

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 29, 2018, 05:00 PM IST
மிகவும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கை மீண்டும் ஒத்திவைத்த சுப்ரீம்கோர்ட் title=

அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.....

அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான மனுக்களை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.  

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி, யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் இவ்வழக்கை விசாரித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு, மாற்ற வேண்டிய அவசியமில்லை, என்று கூறியது. 

இதையடுத்தது, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் கோரியிருந்தன. ஆனால், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத்தேவையில்லை என்று  நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொழுகை நடத்துவதற்கு மசூதி அவசியமில்லை என்று இஸ்லாம் கூறுவதை சுட்டிக்காட்டி கடந்த 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தை மேற்கோள் காட்டி இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கை விரைவான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான 3 நீதிபதிகளின் புதிய அமர்வு ஒன்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதூ குறித்து, உச்சநீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் இது தொடர்பான வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

 

Trending News