டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த கூட்டத்தொடரின் இடையில் டெல்லியில் "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து இன்று பேசினார். அப்போது அவர், "பாஜகவினர் இந்த படத்திற்கு தெரு தெருவாக போஸ்டர்களை ஒட்டுகிறார்கள். இப்படி போஸ்டர் ஒட்டுவதற்காகதான் பாஜக அரசியலுக்கு வந்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், இத்தனை ஆண்டுகள் நாட்டில் ஆட்சி புரிந்துவிட்டு, கடைசியில் ஒரு படத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை பெற இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாதங்களில் தஞ்சமடைகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் தனது ஆட்சி காலத்தில் வேறு எந்த நல்லதையும் செய்யவில்லை என்பதே அர்த்தம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | நீட் தேர்வு விலக்கு மசோதாவா.? கை விரிக்கும் மத்திய அரசு..!
தொடர்ந்து பேசிய அவர், "இந்த படத்துக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று பாஜகவினர் கேட்கிறார்கள். ஆனால், ஒரு வேளை அப்படி இந்த படம் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணம் நிஜமாகவே பாஜகவினருக்கு இருந்தால், படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் போட சொல்லியிருக்கலாமே.
யூடியூபில் பதிவிட்டால் அனைவரும் இலவசமாக அப்படத்தைப் பார்க்க முடியுமே. இதற்கு வரிவிலக்கு வேண்டும் என ஏன் விரும்புகிறீர்கள்? செலவில்லாமல் யூடியூபில் போட்டு ஒரே நாளில் அனைவரையுமே பார்க்க வைத்துவிடலாமே" என்று நகைக்கும் விதமாக பதிலளித்தார்.
இதற்கு கூட்டத்தில் கலந்துக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆதரவு உறுப்பினர்கள் சத்தமிட்டு சிரித்து அவரது கருத்தை வரவேற்றனர்.
This picture reflects the TRUE nature of Kejriwal and AAP.
This Devil's laugh won't be forgotten! #TheKashmiriFiles #Kejriwal #KejriwalExposed pic.twitter.com/L4pA25UlZG
— Shraddha (@SsoulImmortal) March 25, 2022
இந்நிலையில் டுவிட்டரில் பலரும் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு முன்னதாக சில படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளார், ஆனால் இந்த படத்திற்கு பாஜகவினர் ஆதரவு இருப்பதினால் பாராமுகம் காட்டுகிறார் என கருத்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
This is the height of worst politics in Indian history.#ArvindKejriwal #TheKashmiriFiles pic.twitter.com/DyFTefRIHB
— Amberpet Kiran (@AmberpetKiran) March 24, 2022
மேலும் படிக்க | புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டிய நபர்கள்: துணிச்சலாக புகாரளித்த சிங்கப்பெண்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR