இலவச மின்சாரத்தை அடுத்து, தண்ணீர் கட்டணங்களை தள்ளுபடி செய்த அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களுக்கு குடிநீர் நிலுவைத் தொகையை முழுமையாக மன்னிப்பதாக அறிவித்துள்ளார் டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2019, 02:23 PM IST
இலவச மின்சாரத்தை அடுத்து, தண்ணீர் கட்டணங்களை தள்ளுபடி செய்த அரவிந்த் கெஜ்ரிவால் title=

புதுடெல்லி: டெல்லி மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வரம்பு வரை இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றொரு பரிசை மக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த முறை கெஜ்ரிவால் குடிநீர் நிலுவைத் தொகையை முழுமையாக மன்னிப்பதாக அறிவித்துள்ளார். 

அதுக்குறித்து அவர் கூறியது, 

பல மாதங்களுக்கு பலருக்கு குடிநீர் கட்டண ரசிது கிடைப்பதில்லை. எந்தவித அளவு எடுக்காமலும் குடிநீர் கட்டணம் பில் அனுப்பப்படுவதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன எனக்கூறினார். இதனை சரிசெய்ய தர்ப்பித்து பில்லிங் எடுப்பதில் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீட்டர் அளவீடு எடுக்கப்படுகிறது. அப்படி புதிய தொழில்நுட்பத்துடன் அளவீடு எடுக்கும் போது பழைய பில்லுடன் சேர்ந்து வருகின்றன. அதனால் தான் குடிநீர் நிலுவைத் தொகையை இலவசமாக அறிவிக்கிறோம். 

நவம்பர் 30 ஆம் தேதிக்குள் வீட்டில் குடிநீர் மீட்டர் பொருத்துவோருக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பலனைப் பெறுவார்கள் என்று டெல்லி முதல்வர் கூறினார். அத்தகைய வாடிக்கையாளர்கள் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறினார். 

முன்னதாக, முதல்வர் கெஜ்ரிவால் 200 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் நுகர்வோருக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்திருந்தார். இது தவிர 201 முதல் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்த 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News