மாலத்தீவிற்கான பயண சீட்டுகளை ரத்து செய்தால் அபராத தொகை இல்லை என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது!
மாலத்தீவில் நிலவி வரும் அவசர பிரகடன நிலையின் கருத்தில்கொன்டு ஏர் இந்தியா நிறுவனம், வரும் பிப்., 20 ஆம் தேதி வரை மாலத்தீவிற்கு செல்ல மற்றும் மாலத்தீவில் இருந்து வருவதற்கு பதிவு செய்த பயணச்சீட்டுகளை ரத்து செய்யும் கட்டணங்களை நீக்கியுள்ளது!
மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, நாடு முழுவதும் 15 நாள் அவசர பிரகடன நிலை கொண்டுவரப்பட்டுள்ளது. முன்னதாக மாலத்தீவில் 12 எம்.பி.க்களின் தகுதிநீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் கைதுசெய்யப்பட்ட எதிர்கட்சித் தலைவர்களையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அதிபர் அப்துல்லா யாமீனின் பறிகோகும் சூழல் நிலவியது.
இதனையடுத்து அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
பெரும் குழப்பமான சூழல் அங்கு நிலவி வருவதால், மாலத்தீவில் இருந்து இந்தியா பயணிக்க விரும்பும் பயணிகள் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் முன்னதாக முன்பதிவு செய்த பயணசீட்டுகளை ரத்து செய்து வருகின்றனர்.
இந்த பயணசீட்டு ரத்திற்காக தொகையினை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது!
இந்தியாவில் இருந்து நாள்தோறும் டெல்லி- திருவணந்தபுரம்- மாலத்தீவு வழித்தடத்தில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேப்போல் பெங்களூருவில் இருந்து செவ்வாய் கிழமைகளை தவிர மாலத்தீவிற்கு விமானங்கள் இயக்கப்படு வருகிறது.