தனது சொந்த படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி; 2 பேர் காயம்

சத்தீஸ்கரில் இந்திய - திபெத் எல்லைக் காவல்படையை சேர்ந்த ஒரு பாதுகாப்பு படை வீரர் தனது சொந்த படையை சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் பலி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2019, 06:28 PM IST
தனது சொந்த படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி; 2 பேர் காயம் title=

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள நாராயன்பூரில் அதிர்ச்சி அளிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது இந்திய - திபெத் எல்லைக் காவல்படையை சேர்ந்த ஒரு பாதுகாப்பு படை வீரர் தனது சொந்த படையை சேர்ந்த வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீரர்கள் அனைவரும் ஐ.டி.பி.பியைச் (Indo-Tibetan Border Police) சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை பஸ்தர் ஐ.ஜி உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரத்தில், துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஐ.டி.பி.பி ஜவான்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு காரணமாக 6 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த துப்பாக்கிச் சூட்டை தடுக்க சென்ற போது இரண்டு வீரர்களும் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைத்து வீரர்களின் சடலங்களும் ராய்ப்பூருக்கு கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ரெஹ்மான் கான், மகேந்திரா, விஸ்வரூப் மகாடோ, சுப்ரீத் சர்க்கார், உல்லாஸ், தல்ஜித் சிங் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், காயமடைந்த இரண்டு வீரர்களான பிஜிஷ் மற்றும் சீதாராமின் நிலைமை மோசமாக உள்ளது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மசூதுல் ரஹ்மான், சுர்ஜீத் சர்க்கார், பிஷ்வரூப் மகாடோ, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங், பஞ்சாபின் தல்ஜீத் சிங் மற்றும் கேரளாவின் பீஜீஷ் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், காயமடைந்த வீரர்களில் கேரளாவின் உல்லாஸ் மற்றும் ராஜஸ்தானின் சீதாராம் டூன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் ஆவார்கள்.

இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் தமரத்வாஜ் சாஹுவின் அறிக்கையும் வெளிவந்துள்ளது. 5 வீரர்கள் உயிரிழந்தது குறித்த தகவல் கிடைத்ததும், அங்கு காயமடைந்த வீரர்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. விசாரணையின் பின்னரே இந்த சம்பவத்தின் காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.

Trending News